தி இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் (புதினம்)
த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் (The Inheritance of Loss) கிரண் தேசாயால் எழுதப்பட்ட ஒரு புதினம். 2006 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந் நாவலுக்கு அவ்வாண்டிற்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது இந்நாவலாசிரியரின் இரண்டாவது நாவலாகும்.
இந்நாவல், 1986-லிருந்து 1988 வரையிலும் தீவிர வன்முறை மிகுந்த நிகழ்வாக இருந்த, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்ட நேபாள மக்கள் தனி மாநிலம் கோரி நிகழ்த்திய போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு, ஓய்வுபெற்ற நீதிபதியும், விபத்தொன்றில் தனது பெற்றோரை இழந்துவிட்ட அவரது பேத்தி சாய் ஆகியோரை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.