புக்கர் பரிசு

புக்கர் பரிசு (Booker Prize) அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction), ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே பலரும் அறிந்த பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.

பின்னணிதொகு

அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது புக்கர்-மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, மான் குரூப் என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், புக்கர் என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு என மாற்றினர்.

முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.

பரிசு பெற்றவர்கள் விவரம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. தென் கொரிய எழுத்தாளருக்கு மான் புக்கர் விருது

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கர்_பரிசு&oldid=3310728" இருந்து மீள்விக்கப்பட்டது