வில்லியம் கோல்டிங்

சர் வில்லியம் கோல்டிங் (Sir William Gerald Golding, செப்டம்பர் 19, 1911ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும். பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961 இன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980 இல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ்(Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988 இல் சர் பட்டம் பெற்றார். 1993 இல் காலமானார்.

வில்லியம் கோல்டிங்
பிறப்புவில்லியம் கோல்டிங்
செப்டம்பர் 19, 1911
தூய கோலும்ப் மைனோர் , கார்ன்வால், இங்கிலாந்து
இறப்புஜூன் 19, 1993 வயது:82
கார்ன்வால், இங்கிலாந்து
தொழில்எழுத்தாளர்
தேசியம்ஆங்கிலேயர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்லார்ட் ஆஃவ் தி பிளைஸ்(Lord of the Flies)
குறிப்பிடத்தக்க விருதுகள்புக்கர் பரிசு 1980
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கோல்டிங்&oldid=3459611" இலிருந்து மீள்விக்கப்பட்டது