செகான் கருணாதிலக்க

செகான் கருணாதிலக்க (Shehan Karunatilaka, பிறப்பு: 1975) இலங்கையைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் 2010 இல் எழுதிய ஆங்கில மொழிப் புதினம் சைனாமேன் பொதுநலவாய பரிசு,[1] தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எசு.சி பரிசு, கிராத்சியான் பரிசுகளைப் பெற்றது. அத்துடன் விசுடனின் 'எல்லா காலத்திலும் இரண்டாவது சிறந்த துடுப்பாட்டப் புத்தகமாகத்' தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது மற்றுமொரு புதினமான மாலி அல்மெய்தாவின் ஏழு நிலாக்கள் என்ற ஆங்கிலப் புதினத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது.[2]

செகான் கருணாதிலக்க
Shehan Karunatilaka
2020 இல் கருணாதிலக்க
2020 இல் கருணாதிலக்க
பிறப்பு1975 (அகவை 48–49)
காலி, இலங்கை
தொழில்எழுத்தாளர்
தேசியம்இலங்கையர்
காலம்2000 முதல்
வகைபுதினம்
கருப்பொருள்இலங்கை சமூகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சைனாமேன் (2010)
மாலி அல்மெய்டாவின் ஏழு நிலாக்கள் (2022)
இணையதளம்
www.shehanwriter.com

வாழ்க்கைக் குறிப்பு தொகு

செகான் கருணாதிலக்க 1975 இல் இலங்கையின் தெற்கே காலியில் பிறந்தார்.[3] கொழும்பு, கொள்ளுப்பிட்டி புனித தோமையர் ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்று பின்னர் நியூசிலாந்து சென்று வங்கானி பள்ளியில் பயின்றார். பின்னர் மெசே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், வணிக முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார்.[3][4] இலண்டன், ஆம்ஸ்டர்டம் நகரங்களிலும் பின்னர் சிங்கப்பூரிலும் பணியாற்றினார்.

பணிகள் தொகு

சேகன் கருணாதிலக விளம்பரத்துறையில் பணி செய்தார்.  தி கார்டியன், நியூஸ்விக், நேஷனல் ஜாக்ராபிக்,  ரோலிங் ஸ்டோன், விஸ்டன், தி கிரிக்கட்டர், தி எக்கனாமிக் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் எழுதி வருகிறார். இவரது முதல் புதினம் பெயிண்டர் என்னும் பெயரில் வந்தது. 2000 ஆம் ஆண்டுக்குரிய கிரெடியான் பரிசு கிடைத்தது. 

இரண்டாவது புதினம்  சைனாமேன்: தி லெஜென்ட் ஆப் பிரதீப் மேத்யூ  கிரிக்கட் ஆட்டத்தைப் புனைவு செய்து இலங்கை சமூகத்தைப் பற்றி விவரிக்கிறது.[5] இந்தப் புதினத்திற்குக் காமன்வெல்த் புக் பரிசு, 2012 ஆம் ஆண்டு டி எஸ் சி பரிசு, 2008 ஆம் ஆண்டு கிரேடிங் பரிசு ஆகியன கிடைத்தன. 2015 இல் சிங்கள மொழியில் இந்தப் புதினம் மொழிபெயர்க்கப்பட்டது.[6]

மேற்கோள் தொகு

  1. https://www.theguardian.com/books/2012/jun/08/shehan-karunatilaka-commonwealth-book-prize
  2. "The Seven Moons of Maali Almeida | The Booker Prizes". thebookerprizes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  3. 3.0 3.1 "Shehan Karunatilaka". internationales literaturfestival berlin. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.
  4. "Shehan Karunatilaka". The Modern Novel.
  5. https://www.worldcat.org/identities/lccn-n2010213012/
  6. http://www.diogenes.lk/

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செகான்_கருணாதிலக்க&oldid=3579532" இலிருந்து மீள்விக்கப்பட்டது