ரூத் பிராவர் ஜாப்வாலா

ரூத் பிராவர் ஜாப்வாலா (Ruth Prawer Jhabvala, 7 மே 1927 – 3 ஏப்பிரல் 2013) செருமனியில் பிறந்த பிரித்தானிய, அமெரிக்கப் புதின எழுத்தாளர் மற்றும் திரைப்பட எழுத்தாளர் ஆவார். இலக்கியத்துக்கான புக்கர் பரிசு, திரைப்படத்திற்கான ஆசுக்கர் விருதும் பெற்ற பெண்மணி ஆவார்.[1]

ரூத் பிராவர் ஜாப்வாலா
Ruth Prawer Jhabvala
பிறப்புரூத் பிராவர்
(1927-05-07)7 மே 1927
கோல்ன், ஜெர்மனி
இறப்பு3 ஏப்ரல் 2013(2013-04-03) (அகவை 85)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
வாழ்க்கைத்
துணை
சைரசு ஜாப்வாலா (திருமணம் 1951)
விருதுகள்1975, மான் புக்கர் பரிசு
1984, பாஃப்டா விருது
1987, அகாதமி விருது
1993, அகாதமி விருது

வாழ்க்கைக்குறிப்பு

தொகு

செருமனியில் கோல்ன் நகரில் பிறந்தார். இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர்.[2] இலண்டன் பல்கலைக்கழகத்தில் அரசி மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து 1951இல் பட்டம் பெற்றார். அங்கு இந்திய பார்சி மாணவரான சி.எஸ் எச் ஜாப்வாலாவைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார். கணவருடன் இந்தியாவில் குடியேறினார். இருவரும் புதுதில்லியில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மூன்று பெண் மக்கள் பிறந்தார்கள். 24 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார்.[3][4]

எழுத்துப்பணி

தொகு

இவருடைய முதல் புதினம் 1955 இல் வெளிவந்தது. சூடும் தூசும் என்னும் புதினத்திற்காக 1975இல் இவருக்குப் புக்கர் பரிசு வழங்கப்பட்டது.[5] இவர் எழுதிய கதைகள் இந்திய வாழ்க்கை முறைகளையும், நுட்பங்களையும், சிக்கல்களையும் சித்தரிப்பனவாக இருந்தன.

திரைத்துறைப் பங்களிப்பு

தொகு

திரைப்படத் தயாரிப்பாளர் இசுமாயில் மெர்ச்சண்ட், இயக்குநர் ஜேம்சு ஐவரி ஆகியோருடன் இணைந்து ஜாப்வாலா திரைக்கதை உரையாடல்கள் எழுதினார். 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டார். திரைப்படத்துறைப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இவருக்கு ஆசுக்கர் விருது கிடைத்தது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/opinion/op-ed/she-came-she-saw-she-wrote/article4577725.ece
  2. Merchant, Ismail (2012-04-09). Merchant-Ivory: Interviews. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781617032370. பார்க்கப்பட்ட நாள் 4 April 2012.
  3. "Ruth Prawer Jhabvala obituary". The Guardian. 3 April 2013. http://www.guardian.co.uk/books/2013/apr/03/ruth-prawer-jhabvala. பார்த்த நாள்: 6 April 2013. 
  4. "Ruth Prawer Jhabvala (1927-2013)". Outlook. 3 April 2013 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130409103249/http://blogs.outlookindia.com/default.aspx?ddm=10&pid=2954&eid=31. பார்த்த நாள்: 6 April 2013. 
  5. "Novelist, Oscar winner Ruth Prawer Jhabvala dies". HT Mint. 3 April 2013. http://www.livemint.com/Consumer/hJ10z7t1JS2CkhDZ7LgweJ/Novelist-Oscar-winner-Ruth-Prawer-Jhabvala-dies.html. பார்த்த நாள்: 6 April 2013. 
  6. http://www.nytimes.com/2013/04/04/movies/ruth-prawer-jhabvala-writer-dies-at-85.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_பிராவர்_ஜாப்வாலா&oldid=3792097" இலிருந்து மீள்விக்கப்பட்டது