தி எலிபேண்ட் விசுபரர்
தி எலிபேண்ட் விசுபரர் (The Elephant Whisperer) என்பது ஏப்ரல் 2009-ல் இலண்டனில் பான் மேக்மில்லனால் வெளியிடப்பட்ட மற்றும் சூலை 2009-ல் நியூயார்க்கில் உள்ள தாமசு டன்/தூய மார்ட்டின் அச்சகம் மூலம் வெளியிடப்பட்டது புத்தகம் ஆகும். இது தென்னாப்பிரிக்க எழுத்தாளரும் இயற்கைப் பாதுகாவலருமான லாரன்சு ஆண்டனி பத்திரிகையாளர் கிரஹாம் ஸ்பென்சுடன் இணைந்து எழுதிய இரண்டாவது புத்தகமாகும்.
முதல் பதிப்பு (ஐக்கிய இராச்சியம்) | |
நூலாசிரியர் | லாரன்ஸ் அந்தோணி & கிர்காம் ஸ்பென்சு |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம், ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
வகை | உண்மைக் கதை |
வெளியீட்டாளர் | பான் புத்தகங்கள் (இலண்டன்), தாமஸ் டன் புக்ஸ்/தூய மார்ட்டின் அச்சகம் (நியூயார்க்கு) |
வெளியிடப்பட்ட நாள் | 2009 |
ஊடக வகை | அச்சில், மின் புத்தகம், ஒலி புத்தகம் |
பக்கங்கள் | 368 பக்கங்கள் |
ISBN | 978-0312565787 |
OCLC | 317928636 |
முன்னைய நூல் | பாபிலோன் ஆர்க் |
கண்ணோட்டம்
தொகுஅதிகம் விற்பனையாகும் இந்தப் புத்தகம், ஆப்பிரிக்க விளையாட்டுக் காப்பகத்தில் உள்ள ஆப்பிரிக்க யானைக் கூட்டத்தின் கதையைச் சொல்கிறது. அந்தோணி இந்த யானைகளின் ஆபத்தான நடத்தைக்காகச் சுடப்பட வேண்டும் என்று மக்களின் கருத்தின்படி சுடப்படவிருந்த நிலையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் செயல் குறித்தது.
தி எலிபேண்ட் விசுபரர் பிரெஞ்சு,[1] ஜெர்மன்,[2] இத்தாலி,[3] சீனம், மற்றும் எசுபானியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பின்லாந்து, ஹாலந்து, ஸ்லோவேனியா, கனடா, மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் மூலம் வெளியிடப்பட்டது. .
இலக்கிய விமர்சனம்
தொகுவிமர்சனங்கள்
தொகுஇந்தப் புத்தகம் பலமுறை பத்திரிகைகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.[4][5][6][7]
அந்தோணி பல அற்புதமான விலங்குகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். இல்லையெனில் இவை உலகிலிருந்து தொலைந்து போயிருக்கும். நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கும்போது, இந்த ஊக்கமளிக்கும் புத்தகத்தைப் படித்து, மற்றவர்களுடன் பரவலாகப் பகிரவும்.
- மார்க் பெகோஃப், விலங்குகளின் உணர்ச்சிகரமான வாழ்க்கை என்ற நூலின் ஆசிரியர்.
எனது முப்பத்தைந்து வருடங்களில் மனிதன்/விலங்கு தொடர்பைப் படிக்கும் போது, அயல்நாட்டு விலங்கின் மனோதத்துவ மண்டலத்திற்குள் நுழையும் திறன் கொண்ட சிலரை மட்டுமே நான் சந்தித்திருக்கிறேன். லாரன்ஸ் ஆண்டனி இங்கும் திரும்பியும் வந்துள்ளார். தி எலிபேண்ட் விசுபரர் என்பது யானைகளுடன் ஒன்றாக இருக்கும் இவரது திறமையின் உண்மையான பிரதிபலிப்பாகும்.
- ரால்ப் ஹெல்ஃபர், மோடோக்கின் ஆசிரியர்.
மனிதர்கள் மற்றும் மனிதர்கள் அல்லாதவர்களுடன் நெருங்கிய சந்திப்புகள், சில அழகான, சில பயமுறுத்தும், அன்புடன் எழுதப்பட்ட கதை. ஆப்பிரிக்க யானைகளின் கூட்டத்தைப் பாதுகாப்பதில் அந்தோணியின் சோதனைகள் மற்றும் இன்னல்கள் பற்றிய கதை ஒரு உவமை.
மேற்கோள்கள்
தொகு- ↑ In French: Anthony & Spence (2011). L'homme qui murmurait à l'oreille des éléphants (369 pages), Edition les 3 génies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2917952075, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782917952078
- ↑ In German: Anthony & Spence (2010). Der Elefantenflüsterer: Mein Leben mit den sanften Riesen und was sie mir beibrachten (440 pages), MVG Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3864152283, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783864152283
- ↑ In Italian: Anthony & Spence (2010). L'uomo che Parlava agli Elefanti (329 pages), Newton Compton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788854121058
- ↑ Bent, Nancy (1 November 2009). "Untitled [review of The Elephant Whisperer, by Lawrence Anthony]". Booklist: 9. https://archive.org/details/sim_booklist_2009-11-01_106_5/page/9.
- ↑ Selwyn, Laurie (1 May 2013). "Untitled [review of The Elephant Whisperer (audio edition), by Lawrence Anthony]". Library Journal 138 (8): 50. https://archive.org/details/sim_library-journal_2013-05-01_138_8/page/50.
- ↑ Schaefer, Edell M. (1 November 2009). "Untitled [review of The Elephant Whisperer, by Lawrence Anthony]". Library Journal 134 (18): 85–86. https://archive.org/details/sim_library-journal_2009-11-01_134_18/page/85.
- ↑ Anonymous (1 September 2009). "Untitled [review of The Elephant Whisperer, by Lawrence Anthony]". Kirkus Reviews 77 (17).
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் of Lawrence Anthony