தி சிங்கப்பூர் ஸ்டோரி

தி சிங்கப்பூர் ஸ்டோரி (The Singapore Story) என்ற புத்தகம் சிங்கப்பூரின் தந்தை என்று அறியப்பட்ட சுதந்திர சிங்கப்பூரின் முதல் பிரதரமான திரு லீ குவான் யூவால் எழுதப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் லீ குவான் யூ. தனது தோழர்களுடன் சேர்ந்து தொடங்கிய மக்கள் செயல் கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு சுதந்திர சிங்கப்பூர் உருவாவதற்கு ஒரு காரணியாகவும் இருந்த அவர், சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார்; அவரது செயல்பாடு அவரது மக்கள் செயல் கட்சியை 1963 ல் இருந்து 2013 வரை சிங்கப்பூரின் ஆளும் கட்சியாக வைத்திருக்கிறது.

பிரித்தானியாவின் காலனியாக இருந்த காலகட்டத்திலேயே மக்கள் செயல் கட்சியைத் தொடங்கிய லீ, தனது கட்சியை ஆளும் பொறுப்பில் 1959 லேயே கொண்டுவந்தார். 1961 ல் பிரித்தானியாவிடமிருந்து 1961 ல் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரிம் முதல் பிரதமராக 1959 முதல் 1990 வரை தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பதவி வகித்த லீ குவான் யூ, அந்தக் குறுகிய காலத்திற்குள் மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக விளங்கிய சிங்கப்பூரை முதல்நிலை நாடாக மாற்றிக் காட்டிய கதை தான், இரு புத்தகங்களாக, தி சிங்கப்பூர் ஸ்டோரி மற்றும் ஃபரம் தேர்ட் வர்ல்ட் டு ஃபர்ஸ்ட் என்று இரு புத்தகங்களாக எழுதப் பட்டது.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_சிங்கப்பூர்_ஸ்டோரி&oldid=3247588" இலிருந்து மீள்விக்கப்பட்டது