தி பிரின்ஸ்

மாக்கியவெல்லியின் அரசியல் நூல்

த பிரின்ஸ் ( இத்தாலியம்: Il Principe, இலத்தீன்: De Principatibus ) என்பது 16 ஆம் நூற்றாண்டய அரசியல் ஆய்வு நூலாகும் . இது இத்தாலிய இராசதந்திரியும் அரசியல் கோட்பாட்டாளருமான நிக்கோலோ மாக்கியவெல்லியால் எழுதப்பட்டது. இவரது கடிதத்திலிருந்து, 1513 ஆம் ஆண்டில் இதன் ஒரு பதிப்பு டி பிரின்சிபாட்டிபஸ் (Of Principalities).[1] என்ற லத்தீன் பெயரில் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இதன் அச்சிடப்பட்ட பதிப்பு 1532 வரை வெளியிடப்படவில்லை. மச்சியாவெல்லி இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இது மெடிசி போப் கிளெமென்ட் VII இன் அனுமதியுடன் வெளியிடபட்டது. ஆனால் "உண்மையில் இதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, த பிரின்ஸ் ஆக்கத்தின் கையெழுத்துப் பிரதி தோன்றியதிலிருந்து, இந்த எழுத்துக்கள் குறித்து சர்ச்சைகளை எழுந்தன".

The Prince
1550 ஆண்டைய பதிப்பின் தலைப்புப் பக்கம்
நூலாசிரியர்நிக்கோலோ மாக்கியவெல்லி
உண்மையான தலைப்புDe Principatibus / Il Principe
நாடுஇத்தாலி
மொழிஇத்தாலிய மொழி
பொருண்மைஅரசியல் அறிவியல்
வகைஅபுனைவு
வெளியீட்டாளர்Antonio Blado d'Asola.
வெளியிடப்பட்ட நாள்
1532
அடுத்த நூல்Discourses on Livy

இது ஒரு பாரம்பரிய படைப்பு என கருதப்பட்டாலும், குறிப்பாக இது புதுமையானது என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. காரணம் இது லத்தீன் மொழியில் அல்லாமல் இத்தாலிய வடக்கு வட்டார மொழியில் எழுதப்பட்டது. இது டான்டேவின் தெய்வீக நகைச்சுவை மற்றும் மறுமலர்ச்சி இலக்கியத்தின் பிற படைப்புகள் வெளியானதிலிருந்து பிரபலமடைந்தது.[2][3]

நூல்

தொகு

நிக்கோலோ மாக்கியவெல்லி வேறு பல நூல்களை எழுதி இருந்தாலும் இவருக்குப் புகழையும், எதிர்மறை விமர்சனத்தையும் பெற்றுத்தந்த நூலாகவும் புகழ்வாய்ந்த நூலாக த பிரின்ஸ் உள்ளது.

இந்த ஆராய்ச்சி நூலில், இவர் குறிப்பாக முடியரசுகளைப் பற்றி ஆராய்கிறார். இந்த நூலின் தலைப்பே இது முடியரசை ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்பதைக் காட்டுகிறது. நூலில் இவர் தன் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறான். அரசியல் அறிவியலைப் பற்றிப் புதுமையான சிந்தனைகளை முதன் முதலில் இவர் இந்த நூலில் தான் வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு முன் இப்படிச் சிரித்தவர்கள் கிடையாது எனப்படுகிறது. எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் இவர் இந்த நூலில் கூறியிருக்கிறார்.

ஓர் அரசு நிலை பெறுவதற்காகக் கையாளக் கூடிய வழிகள் எப்படிப்பட்டவையாயினும் அவை வரவேற்கக் கூடியனவே என்று இந்த நூலில் இவர் கூறுகிறார். அரசியல் வெற்றிக்காக, சூழ்ச்சியும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும் - ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று (நம் மகாபாரதத்து அரசியல் சகுனியைப் போல) சொல்லியுள்ளார்.

1559-ஆம் ஆண்டில் உரோமாபுரியில் தடை செய்யப்பட்ட பநைல்களின் பட்டியலில் இந்த நூலும் சேர்க்கப்பட்டது.[4]

நூலின் தாக்கம்

தொகு

தி பிரின்ஸ் நூலானது பல நாடுகளின் அரசியல்வாதிகளுக்குப் பலவகைகளில் பயன்பட்டிருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மூலக்கருத்தைக் கொடுக்கும் கருவூலமாக மாக்கியவெல்லியின் சிந்தனையில் விளைந்த இந்த அரசியல் நூல்கள் பயன்பட்டிருக்கின்றது. இத்தாலியின் சர்வாதிகாரியாக விளங்கிய முசோலினி கல்லூரி மாணவராயிருக்கும்போது. டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு இந்த நூலையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். இட்லரின் படுக்கையறையில் அவர் படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் தி பிரின்ஸ் நூலானது முக்கியமானது. மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த நூல்களுக்கும் தாம் எழுதியுள்ள முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியின் இந்த நூலைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.[5]

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. He wrote about a short study he was making by this Latin name in his letter to Francesco Vettori, written 10 Dec 1513. This is letter 224 in the translated correspondence edition of James B. Atkinson and David Sices: (Machiavelli 1996, ப. 264).
  2. "Italian Vernacular Literature". Vlib.iue.it. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
  3. (Gilbert 1938) emphasizes similarities between The Prince and its forerunners, but still sees the same innovations as other commentators.
  4. நாரா. நாச்சியப்பன் (1993). "சிந்தனையாளன் மாக்கியவெல்லி". நூல். பிரேமா பிரசுரம். pp. 18–22. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. நாரா. நாச்சியப்பன் (1993). "சிந்தனையாளன் மாக்கியவெல்லி". நூல். பிரேமா பிரசுரம். pp. 24–26. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பிரின்ஸ்&oldid=3930802" இலிருந்து மீள்விக்கப்பட்டது