தி மார்சியன் (புதினம்)

தி மார்சியன் அல்லது தி மார்ஷியன் (The Martian) 2011 இல் வெளியான ஒரு ஆங்கில அறிபுனைப் புதினம். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டி வியர் என்ற எழுத்தாளரின் இரண்டாவது புதினமாகும். வியர் 2011 ஆம் ஆண்டு இப்புதினத்தை தானே பதிப்பித்தார். மின்னூலாக வியரின் வலைத்தளத்திலும் பின்பு அமேசான்.காம் தளத்திலும் இப்புதினம் வெளியானது. இதன் வெற்றியைத் தொடர்ந்து கிரவுண் பப்ளிஷர்ஸ் நிறுவனம் இதன் பதிப்புரிமையை வாங்கி 2014 ஆண்டு மறு வெளியீடு செய்தது.[1][2][3]

தி மார்சியன்: எ நாவல்
2014 கெட்டி அட்டைப் பதிப்பின் முன் அட்டை
நூலாசிரியர்ஆண்டி வியர்
அட்டைப்பட ஓவியர்எரிக் வைட்
நாடுஐக்கிய அமெரிக்க
மொழிஆங்கிலம்
வகைஅறிபுனை
வெளியீட்டாளர்கிரவுண் பப்ளிஷிங் குழுமம்
வெளியிடப்பட்ட நாள்
2011 (மின்னூல்),
மார்ச் 2013 (ஒலிநூல்),
பெப்ரவரி 11, 2014 (கெட்டி அட்டைப் பதிப்பு)
பக்கங்கள்369
ISBNISBN 978-0-8041-3902-1 (கெட்டி அட்டை), ISBN 978-0-8041-3903-8 (மின்னூல்)

2035 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு அனுப்பப்படும் விண்ணோடி மார்க் வாட்னி, தவறுதலாக அங்கே தனித்து விடப்படுகிறார்.[4] அவர் செவ்வாயில் உயிர் வாழ நிகழ்த்தும் பொராட்டமும், அவரை புவிக்கு மீட்க நாசா மேற்கொள்ளும் முயற்சிகளும் இப்புதினத்தின் கருபொருட்களாம். பெரும் வெற்றி பெற்ற இப்புதினம் 2015 ஆம் ஆண்டு மேட் டேமன் நடித்த ஒரு ஆங்கிலத் திரைப்படமாக உருவாக்கம் பெற்று, அதுவும் வெற்றி கண்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Shippey, Tom (February 7, 2014). "Book Review: 'The Martian' by Andy Weir; 'Red Rising' by Pierce Brown". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் February 16, 2014.
  2. Ayres, Jeff (February 11, 2014). "Andy Weir delivers with 'The Martian'". அசோசியேட்டட் பிரெசு (via Yahoo). பார்க்கப்பட்ட நாள் February 16, 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
  3. Catucci, Nick (February 12, 2014). "The Martian (2014)". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் March 28, 2014.
  4. Weir, Andy (January 5, 2015). "FaceBook - Andy Weir's Page - Timeline Photos (comment)". ஃபேஸ்புக். பார்க்கப்பட்ட நாள் November 16, 2015. "Ares 3 launched on July 7, 2035. They landed on Mars (Sol 1) on November 7, 2035. The story begins on Sol 6, which is November 12, 2035." - Andy Weir
  5. "Fox Moves Ridley Scott's 'The Martian' to October". June 10, 2015. http://www.hollywoodreporter.com/news/fox-moves-ridley-scotts-martian-801733. பார்த்த நாள்: June 10, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மார்சியன்_(புதினம்)&oldid=3665493" இலிருந்து மீள்விக்கப்பட்டது