தீதி தாமோதரன்

இந்திய திரைக்கதை ஆசிரியர்

தீதி தாமோதரன் (Deedi Damodaran) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். மலையாள திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராக இவர் செயல்பட்டு வருகிறார்.[1] 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் செயராச்சு இயக்கத்தில் ரஞ்சித், சித்திக், அகசுடின் மற்றும் நீனு மேத்யூ நடித்த குல்மோகர் என்ற திரைப்படம் இவரது முதல் படமாகும். மலையாள திரைப்படங்களின் மூத்த திரைக்கதை எழுத்தாளர் டி.தாமோதரனின் மகளே தீதி தாமோதரன் ஆவார். மலையாளத் திரையுலகின் பெண் தொழிலாளர்களின் நலனுக்கான அமைப்பான திரைப்பட தொகுப்பில் பெண் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[2]

தீதி தாமோதரன்
Deedi Damodaran
பிறப்பு4 ஆகத்து 1969 (1969-08-04) (அகவை 55)
கோழிக்கோடு, கேரளம், India
பணிதிரைக்கதை ஆசிரியர்

திரைப்படவியல்

1. குல்மோகர் (2008 )

2. கேரளா கஃபேவில் உள்ள மகல் ( 2009 )

3.நயிக்கா ( 2011 )

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீதி_தாமோதரன்&oldid=3417119" இலிருந்து மீள்விக்கப்பட்டது