தீபங்கர புத்தர்

தீபங்கர புத்தர்
சமற்கிருதம்:  Dipankara
பாளி Dipamkara
சீன மொழி:  Rándēng Fo
திபெத்திய மொழி:  mi slob
தகவல்
Venerated by:  தேரவாதம், மகாயானம், வச்ரயானம்
Attributes:  Causer of Light
Preceded By:  Saraṇaṃkara
Succeeded By:  Koṇḍañña

தீபங்கரர்(சமஸ்கிருதம் மற்றும் பாளி Dīpaṃkara, "தீபத்தை ஏந்தியவர்"; சீனம் 燃燈佛 (பின்யின் Rándēng Fo); திபெ. mi slob; மங் Jula-yin Jokiyaγči, Dibangkara, நேபால் பாசா: दिपंखा Dipankha) பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் கௌதம புத்தருக்கு முற்பட்ட புத்தர் ஆவார்.

பாளி சூத்திரங்களின் படி, எண்ணற்ற புத்தர்கள் அவதரித்துள்ளனர், அவர்களை அனைவரையும் ஆயிரம் புத்தர்கள் என கூட்டுபெயர் கொண்டு அழைப்பதுண்டு. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு புத்தர் அவதரிக்கின்றனர். சில பௌத்த சம்பிரதாயங்களின் படி, தீபங்கர புத்தர், சாக்கியமுனி புத்தரான கௌதமர் அவதரிப்பதுக்கு முன்பு இப்பூமியில் தோன்றியவர்.

சித்தரிப்பு

தொகு

தீபங்கரர் பொதுவாக அமர்ந்த நிலையில் சித்தரிக்கப்படுகிறார். எனினும் நின்ற கோலத்தில் இவருடைய சித்தரிப்பு சீனா மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. இவரது கரத்தில் அபய முத்திரை காணப்படுகிறது. மிக அரிதாக இவர் தனியாக காணப்படுகிறார். ஆஃப்கானிஸ்தானின் தாலிபன் அரசு தக்ர்த்த பாமியான் புத்தர் சிலைகளும் ஒன்று இவரை குறித்தாக கருதப்படுகிறது. இவரது சிலைகள் சீனாவில் காணப்படுகின்றன.

பொதுவாக ஜாவாவில் இவர், மஞ்சுஸ்ரீ மற்றும் வஜ்ரபாணி ஆகிய இரண்டு போதுசத்துவர்களுடன் காணப்படுகிறார். ஸ்ரீ லங்காவில் இவர் அவலோகிதேஷ்வரர் மற்றும் வஜ்ரபாணி உடன் இருக்கிறார். இவரை கௌதம புத்தர் மற்றும் மைத்திரேயருடனும் எப்போதாவது சித்தரிப்பர்

குறி சொல்லுதல்

தொகு

இவரை குறித்த கீழ்க்கண்ட கதை வழங்கப்பெற்கிற்து.

கௌதம புத்தர், தன்னுடைய முற்பிறவிகளில் ஒன்றில் தீபங்கரரை சந்திக்கிறார். அப்போது அவரிடம் தீபங்கரர், கௌதமர் ஒரு காலத்தில் புத்தர் ஆவார் என தெரிவிக்கிறார். மேலும் கௌதமர் மிகச்சிறந்த ஆசானாக திகழ்வாரென்று, அரசன் சுத்தோதனுக்கும் அரசி மாயா தேவிக்கும் பிறப்பார் என்றும் குறி கூறுகிறார்.


இந்த கதை ஜாதக கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கௌதம புத்தர், தன்னுடைய முற்பிறவிகள் குறித்த சொன்னதன் தொகுப்பே இந்த ஜாதக கதைகள். தீபங்கரரின் காலத்தில் கௌதமர் ஒரு மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். பிறகு துறவியாகும் பொருட்டு, அனைத்து செல்வங்களையும் தானம் செய்து விடுகிறார். துறவியான பின்னர் தீபங்கர புத்தரை சந்திக்கும் போது இந்த முன்னறிவிப்பை பெறுகிறார்.

வழிபாடு

தொகு

பதினேழாம் நூற்றாண்டு வாக்கில், தீபங்கரரின் வழிபாடு, நேபாள புத்த சமூகத்தினரேடே பரவலாக காணப்படத்துவங்கியது. இவர்கள் தீபங்கரரை வணிகர்களின் பாதுகாவலராகவும், தானத்துடன் தொடர்புடையவராகவும் கருதுகின்றனர்.


மேலும் இவர் மாலுமிகளின் பாதுகாவலராகவும் கருதப்பட்டு, இவரது சிலைகளை கரைகளின் ஓரமாக கப்பல்களை காத்து வழி நடத்தும் பொருட்டு சில நேரங்களில் நிறுவப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபங்கர_புத்தர்&oldid=2764556" இலிருந்து மீள்விக்கப்பட்டது