தீபிகா நாராயண் பரத்வாஜ்

தீபிகா நாராயண் பரத்வாஜ் (Deepika Narayan Bhardwaj) இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும், ஆவணப்படத் தயாரிப்பாளரும் மற்றும் சம உரிமை ஆர்வலரும் ஆவார். [1] [2] மணமகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை காரணம் மற்றும் குற்றவியல் பிரிவு 498 ஏ (வரதட்சணை எதிர்ப்பு சட்டம்) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆவணப்படத்தை தயாரித்த பின்னர் பரத்வாஜ் முக்கியத்துவம் பெற்றார். [3] ரோதக் சகோதரிகளின் வைரஸ் வீடியோ சர்ச்சையில் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் சதித்திட்டத்தில் இவர் சாட்சிகளை நேர்காணல் செய்து ஆதாரங்களை சேகரித்து அம்பலப்படுத்தினார். [4]

கல்வி மற்றும் தொழில் தொகு

தீபிகா நாராயண் பரத்வாஜ் துணி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இந்திய இதழிலியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொலைக்காட்சி பத்திரிகையில் முதுகலை சான்றிதழ்ப் பட்டம் பெற்றார். [5]

திரைப்படத் தயாரிப்பைத் தொடர வேலையை விட்டுச் செல்வதற்கு முன்பு 2006 முதல் 2008 வரை [5] இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். [6] இவரது கிராமின் டக் சேவக் என்ற முதல் ஆவணப்படம் 2009 இல் ஜீவிகா: ஆசியா வாழ்வாதார ஆவணப்பட விழாவில் மாணவர் திரைப்பட விழாவில் வெற்றி பெற்றது. [7] இவர் நவம்பர் 2010 முதல் எக்ஸ்சேஞ்ச் 4 என்ற நிறுவனத்தில் தலைமை ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

குறிப்புகள் தொகு

  1. "About Author". swarajyamag.com. Archived from the original on 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-15.
  2. "International Women's Day: Woman activist fights for men abused by women". WION (in ஆங்கிலம்). Archived from the original on 20 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-20.
  3. "Haryana woman's film lends voice to harassed married men". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-01-21. Archived from the original on 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-15.
  4. "Rohtak eve-teasing case gets another turn with a fourth video surfacing". DNA India (in ஆங்கிலம்). 2014-12-12. Archived from the original on 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-15.
  5. 5.0 5.1 VisualCV.com. "Deepika Bhardwaj - Editorial Consultant at exchange4media - VisualCV". visualcv.com (in ஆங்கிலம்). Archived from the original on 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-15.
  6. "In pursuit of purpose: Tales of alternative careers from Gurugram". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-09-09. பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  7. "International Men's Day: 'I'm a Man Who Faced Domestic Abuse'". The Quint (in ஆங்கிலம்). 2018-11-19. Archived from the original on 16 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_நாராயண்_பரத்வாஜ்&oldid=2983093" இலிருந்து மீள்விக்கப்பட்டது