தீப் நாராயண் சிங்

தீப் நாராயண் சிங் (Deep Narayan Singh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியச் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றவரும் பீகாரின் முன்னாள் முதல்வரும் ஆவார்.[1] 

தீப் நாராயண் சிங்
2வது பீகார் முதலமைச்சர்
பதவியில்
1 பிப்ரவரி 1961 – 18 பிப்ரவரி 1961
ஆளுநர்சாகீர் உசேன்
முன்னையவர்சிறி கிருட்டிணா சின்கா
பின்னவர்பினோதானந் ஜா
3வது பீகார் நிதியமைச்சர்
பதவியில்
1 பிப்ரவரி 1961 – 18 பிப்ரவரி 1961
முன்னையவர்சிறி கிருட்டிணா சின்கா
பின்னவர்பீர் சந்த் பட்டேல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-11-25)25 நவம்பர் 1894
புராந்தண்ட், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு7 திசம்பர் 1977(1977-12-07) (அகவை 83)
ஹாஜிப்பூர், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மம்லதா தேவி
வாழிடம்புராந்தண்ட்

பீகாரில் உள்ள புரந்தாண்டில் பிறந்தார்.  சிங், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராக இருந்தார்.[2] இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தேசியவாதிகளான இராஜேந்திர பாபு, அனுகிரஹா பாபு மற்றும் ஸ்ரீ பாபு ஆகியோரின் மூவருடன் தொடர்புடையவர். கிருஷ்ணா சின்காவினைத் தொடர்ந்து பீகார் முதல்வராகப் பதவியேற்றார்.

1979ஆம் ஆண்டில், பீகாரில் உள்ள ஹாஜிப்பூரில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்தால் இவரது நினைவாக அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Deep Narayan Singh Museum, Hajipur". Archived from the original on 24 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of members of the Constituent Assembly (as in November 1949)". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
  3. "Deep Narayan Singh Museum, Hajipur". Archived from the original on 15 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்_நாராயண்_சிங்&oldid=3886456" இலிருந்து மீள்விக்கப்பட்டது