தீ பாதுகாப்புப் போர்வை

தீ பாதுகாப்புப் போர்வை (fire blanket) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம். இது சிறிய அல்லது தொடக்கநிலை நெருப்பை அணைக்க உதவும். இது எளிதில் தீப்பிடிக்காத, தீக்கு எதிராக செயல்படும் பொருள்களால் உருவாக்கப்பட்டது.

தீயை , தீ பாதுகாப்புப் போர்வை கொண்டு அணைக்கும் விதம்


சமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் சிரிய தீ பாதுகாப்புப் போர்வைகள் கண்ணாடியிழைகளால் (fiberglass) உருவாக்கப்படுகிறது. இவை விரைவில் விரிக்கப்படும் வகையில் மடிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.
ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் பெரிய தீ பாதுகாப்புப் போர்வைகள் கம்பளியால் உருவாக்கப்படுகிறது. இவை விரைவில் விரிக்கப்படும் வகையில் செங்குத்தாக வைக்கப்படுகிறது. எதிர்பாராத விதமாக ஒரு நபரின் மேல் தீ பற்றும் போது, அவரின் உடலில் இந்த போர்வை சுற்றப்பட்டு காப்பாற்றப்படுவார்.

இயக்கம்

தொகு

தீ எரிவதற்கு, தீ முக்கோணத்தின் மூன்று மூலங்களான வெப்பம், எரிபொருள், ஆக்சிசன் ஆகிய மூன்றும். இந்தத் தீ பாதுகாப்புப் போர்வையைத் தீயின் மீது கிடத்துவதால், மேற்கூறிய மூன்று மூலங்களையும் உள்ளே நுழையாமல் தடுத்து, நெருப்பை பரவவிடாமல் தடுக்கிறது.

தீ பாதுகாப்புப் போர்வை பொதுவாக இரண்டு அடிமுன்றானைகள் தெரியும் வகையில் பொதியல் செய்யப்பட்டிருக்கும், இதை உபயோகப்படுத்துபவர் இரண்டு அடிமுன்றானைகளைகளையும் ஒரு சேர இழுக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_பாதுகாப்புப்_போர்வை&oldid=2220111" இலிருந்து மீள்விக்கப்பட்டது