துக்கோஜி போன்ஸ்லே (1677-1736) என்பவர் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய போன்சலே மரபின் நான்காவது மன்னராவார். இவர் முதலாம் சாகுஜி மற்றும் முதலாம் சரபோஜி ஆகியோரின் சகோதரரும் தஞ்சாவூரின் முதல் மராத்திய மன்னருமான வெங்கோஜியின் மகனாவார். இவர் 1728 முதல் 1736 வரை ஆட்சி செய்தார்.

துக்கோஜி
சோழமண்டல மன்னன்
ஆட்சி1728-1736
மரபுமராத்தியவம்சம்
அரச குலம்தஞ்சாவூர் மராத்திய அரசு
பிறப்புதஞ்சாவூர்
இறப்புதஞ்சாவூர்

ஆட்சிக்காலம்

தொகு

துக்கோஜி அவரது சகோதரர் சரபோஜியின் மறைவுக்குப்பின் 1728 இல் ஆட்சிக்கு வந்து, 1736 வரை தஞ்சாவூரை ஆண்டார் என கருதப்படுகிறது. ஆனாலும் கிடைக்ககூடிய இரு பதிவுகள் மாறுபட்ட தகவல்களை அளிக்கின்றன. இவரது ஆட்சிக்காலமாக தஞ்சாவூர் மராட்டிய கல்வெட்டானது 8 ஆண்டுகள் என குறிக்கிறது ஆனால் அதேசமயம் சென்னை கையெழுத்து பிரசுரமானது 6 ஆண்டுகள் என குறிக்கிறது.

சரபோஜி தொடங்கிய மறவர் போரை துக்கோஜி முடிவிக்கு கொண்டுவந்தார். ஆனால் அவரது சகோதரர்போல் இல்லாமால் அவர் பவானி சங்கர் பக்கம் மாறி பிந்தையவர் அரியணை ஏற உதவினார்.

இந்தக் காலகட்டத்தின் மராட்டிய கல்வெட்டுகளானது திருச்சிராப்பள்ளியின் ராணியான மீனாட்சிக்கு எதிரியான பாளையத்துக்காரரை எதிர்த்து புரட்சி செய்ய துக்கோஜி உதவினார். மேலும் தென் இந்தியாவின் இந்து ராஜ்ஜியத்திற்காக சாந்தா சாஹிப்பை எதிர்த்து போர் புரிந்தார். 1734 ஆம் ஆண்டு சநாதா சாஹிப்பின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது. 1736 ஆம் ஆண்டு நடந்த சாந்தா சாகிப்பின் இரண்டாவது படையெடுப்பின் போது திருச்சிராப்பள்ளியை வீழ்த்தினார்.

துக்கோஜி ஒரு நல்ல மொழியிலலாளர். இவர்தான் தஞ்சாவூரில் ஹிந்துஸ்தானி இசையை அறிமுகப்படுத்தினார் என கூறப்படுகிறது. சங்கீத சமமிர்தி என்கிற இசையை பற்றி எழுதியுள்ளார். அவரது அமைச்சர் கன்சைமா பண்டிட் என்பவர் பவபுதியின் உத்தரமசரித்திரத்தில் விளக்க உரை எழுதியுள்ளார்.

இறப்பு மற்றும் வாரிசு

தொகு

1736-ல் துக்கோஜி இறந்தார். அவரது மறைவுக்குப்பின் சட்டப்படியான மகனான ஈக்கோஜி தந்தையின் மரணத்திற்குப்பின் அரியணை ஏறினார். ஆனால் அவர் ஓர் ஆண்டிலேயே உடல்நலக் குறைவால் இறந்தார். துக்கேஜி வைப்பாட்டிகள் (மறுமணையாட்டி) மூலமாக அதிகளவு வாரிசுகளை உருவாக்கியிருந்தர். இவரது மரணத்தையடுத்து மூன்று ஆண்டுகள் நாட்டில் குழப்பம் நிலவியது. 1739 இல் பிரதாபசிம்மன் பதவிக்கு வந்தபிறகு குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.

மேற்கோள்

தொகு

The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.

முன்னர் தஞ்சை மராத்திய அரசர்
1728–1736
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்கோஜி&oldid=2935610" இலிருந்து மீள்விக்கப்பட்டது