முதலாம் சரபோஜி

முதலாம் சரபோஜி (English: Serfoji I; Marathi: सरफोजी १) (1675–1728) என்பவர் மராத்திய அரசரான தஞ்சாவூரின் முதலாம் ஏகோஜியின் புதல்வராவார். இவர் 1712 முதல் 1728 வரை தஞ்சாவூர்ரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார். இவர் மராத்திய ஆட்சிப்பகுதிகளை விரிவு படுத்தியதோடு பல இலக்கியங்கள் உருவாகவும் காரணமாயிருந்தார்.

தஞ்சையில் முதலாம் சரபோஜியின் உருவம்
முதலாம் சரபோஜி
மராத்திய மன்னன்
ஆட்சி1712-1728
மரபுமராத்தியவம்சம்
அரச குலம்தஞ்சாவூர் மராத்திய அரசு
பிறப்புதஞ்சாவூர்
இறப்புதஞ்சாவூர்

இலக்கியம் தொகு

சிவபரதம்

(Sivabharata) என்ற சமஸ்கிருத நூல் இவரின் முன்னோரான பேரரசர் வீர சிவாஜியின் வீரதீர பராக்கிரமங்களை உரைப்பதாகும். முதலாம் சரபோஜியின் காலத்தில் இது சிவாஜி சரித்திரம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது[1].

இவரது ஆட்சிக்காலத்தில் தான் அபிராமி பட்டர் வாழ்ந்து வந்தார் என்றும் அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப் பதிகம் போன்ற நூல்களை இயற்றினார் என்றும் வரலாறு இயம்புகிறது.

சிற்பம் தொகு

இவருடைய காலத்தில் சக்கரபாணி கோயில் ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது. மராட்டியர் பாணியிலான தலைப்பாகை, நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை அணிந்து வலக் கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளார். மீசை மெலிந்து உள்ளது. அருகிலுள்ள பெண் இவருடைய மகளாக இருக்க வாய்ப்புள்ளது. [2]

உசாத்துணை தொகு

  1. Subramanian, Pg. 40
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.307
முன்னர்
முதலாம் ஷாஜி
தஞ்சாவூர் மன்னர்
1712–1728
பின்னர்
துக்கோஜி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சரபோஜி&oldid=3599115" இலிருந்து மீள்விக்கப்பட்டது