துடுப்பாட்ட பெருமையின் அருங்காட்சியகம்

துடுப்பாட்ட பெருமையின் அருங்காட்சியகம் (Blades of Glory Cricket Museum) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள துடுப்பாட்ட நினைவு அருங்காட்சியகம் ஆகும். இது மகாராட்டிர மேனாள் துடுப்பாட்ட வீரர் ரோஹன் பேட்டால் நிறுவப்பட்டது.[1] இதனை சச்சின் டெண்டுல்கர் திறந்துவைத்தார். இந்த அருங்காட்சியகம் 5,000 sq ft (460 m2) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வென்ற அணிகளின் அணித்தலைவர்கள் கையொப்பமிட்ட துடுப்பாட்ட மட்டைகள், உலகக் கோப்பை வென்ற அணிகளின் உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மட்டைகள், 2011 துடுப்பாட்ட உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் கையெழுத்திட்ட உடை உட்பட 51,000க்கும் மேற்பட்ட துடுப்பாட்டம் தொடர்புடைய பொருட்களின் சேகரிப்புகளுடன் கூடிய காட்சி மாடம். பிரபல பன்னாட்டு துடுப்பாட்ட வீரர்கள் கையொப்பமிட்டுப் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2][3] 450க்கும் மேற்பட்ட பன்னாட்டு துடுப்பாட்ட வீரர்கள் இந்த அருங்காட்சியகத்தைப்பார்வையிட்டுள்ளனர்.[4]

துடுப்பாட்ட பெருமையின் அருங்காட்சியகம்
Logo of the museum
துடுப்பாட்ட பெருமையின் அருங்காட்சியகம் is located in மகாராட்டிரம்
துடுப்பாட்ட பெருமையின் அருங்காட்சியகம்
Location within மகாராட்டிரம்
நிறுவப்பட்டது2012 (2012)
அமைவிடம்புனே, மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூற்று18°29′9.2328″N 73°50′36.7152″E / 18.485898000°N 73.843532000°E / 18.485898000; 73.843532000
சேகரிப்பு அளவு51,000
வலைத்தளம்www.bladesofglorymuseum.com

மேற்கோள்கள் தொகு

  1. "Pune basks in 'Blades of Glory'". 
  2. "Memories come alive in 'Blades of Glory' cricket museum". Merinews. 
  3. "Kedar Jadhav gifts winning ODI t-shirt to Blades of Glory museum". 
  4. "A unique cricketing journey through history at Pune's Blades of Glory museum in India". sport360.com. {{cite web}}: Missing or empty |url= (help)