துடுப்பாட்ட விதி

துடுப்பாட்ட விதிகள் (laws of cricket) என்பது உலகளவில் துடுப்பாட்ட விளையாட்டின் விதிகளைக் குறிப்பிடும் ஒரு குறியீடாகும். அறியப்பட்ட முதல் துடுப்பாட்டக் குறியீடு 1744 இல் தயாரிக்கப்பட்டது. 1788 ஆம் ஆண்டு முதல், இலண்டன் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் உள்ள தனியார் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) க்குச் சொந்தமான இந்தக் குறியீடு அந்தச் சங்கத்தினால் பராமரிக்கப்படுகிறது. தற்போது 42 சட்டங்கள் உள்ளன (எப்போதும் "L" ஆனது தலைப்பெழுத்துடன் எழுதப்படும்), இது துடுப்பாட்ட விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான அனைத்து அம்சங்களையும் விவரிக்கிறது. எம்.சி.சி, சட்டங்களை ஆறு முறை மறு-குறியீடு செய்துள்ளது, ஒவ்வொன்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளை உருவாக்கும் இடைக்காலத் திருத்தங்களுடன் அமைந்துள்ளது. மிக சமீபத்தியக் குறியீடு (ஏழாவது) அக்டோபர் 2017இல் வெளியிடப்பட்டது; இதன் 3வது பதிப்பு 1 அக்டோபர் 2022இல் நடைமுறைக்கு வந்தது [1]

முன்னாள் துடுப்பாட்ட அதிகாரப்பூர்வ ஆளும் குழுவான எம்.சி.சி இந்தப் பொறுப்பை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையிடம் (ஐ.சி.சி) ஒப்படைத்துள்ளது. ஆனால், MCC சட்டங்களின் பதிப்புரிமையை அதனிடம் தக்க வைத்துக் கொண்டுள்ளது மட்டுமல்லாது அவற்றை மாற்றக்கூடிய ஒரே அமைப்பாகவும் உள்ளது, இருப்பினும், பொதுவாக ஐசிசி மற்றும் துடுப்பாட்ட நடுவர்கள் மற்றும் புள்ளிக் கணக்கீட்டாளர் சங்கம் போன்றவர்களுடன் தீவிர ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

வரலாறு

தொகு

1744 குறியீடு

தொகு
  • நாணய சுழற்சி செய்ய வேண்டும்.
  • இலக்கக் குச்சி 22 அங்குலங்கள் (560 mm) இருக்க வேண்டும் ஆறு அங்குலத்துடன் (152) உயரம் மிமீ) இணைப்பன்கள் இருக்க வேண்டும்;
  • பந்து ஐந்து மற்றும் ஆறு அவுன்சுகள் (140 மற்றும் 170 கிராம்கள்) வரை எடையுள்ளதாக இருக்க வேண்டும்;
  • நிறைவு நான்கு வீச்சுகளைக் கொண்டது.
  • பிழை வீச்சு என்பது, என்பது பந்து வீச்சுக் கோட்டிற்கு முன்னால் கால்கள் செல்வதைக் குறிக்கும்.
  • ஆட்டத்தின்போது நடந்த 17 ஆம் நூற்றாண்டின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பந்தை இருமுறை அடிப்பதும், களத்தைத் தடுப்பதும் ஆட்டமிழப்பாகக் கருதப்பட்டது.
  • பந்து வீசும் வரை இலக்குக் கவனிப்பாளர் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்;
  • ஒரு புதிய மட்டையாளர் வருவதற்கு நடுவர்கள் இரண்டு நிமிடங்களையும், ஆட்டப்பகுதிக்கு இடையில் பத்து நிமிடங்களையும் அனுமதிக்க வேண்டும் (உணவு மற்றும் மழை இடைவேளைகள் தவிர்த்து);
  • களத்தடுப்பாளர்கள் மேல்முறையீடு செய்யாவிட்டால் நடுவரால் மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது;
  • நடுவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு விருப்புரிமை அனுமதிக்கப்படுகிறது. மேலும் நடுவரே "ஒரே நீதிபதி" என்றும் "அவரது தீர்மானமே இறுதியானது" என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "LAW CHANGES 2022 Full explanation of changes" (PDF). lords.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பாட்ட_விதி&oldid=3921064" இலிருந்து மீள்விக்கப்பட்டது