துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான தேசிய ஆணையம்

இந்திய ஒழுங்குமுறை அமைப்பு

துணை மற்றும் சுகாதாரத் தொழில்முறைகளுக்கான தேசிய ஆணையம் (National Commission for Allied and Healthcare Professions (NCAHP)) என்பது இந்திய துணை சுகாதார தொழில் நெறிஞர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஓர் ஒழுங்குமுறை நிறுவனமாகும்.[1] இது 2021 ஆம் ஆண்டு வரை தேசிய மருத்துவ ஆணையம், இந்தியப் பல் மருத்துவ மன்றம், இந்திய செவிலிய மன்றம், இந்திய மருந்தியல் குழுமம் போன்றவற்றின் கீழ் வராத அனைத்து துணை சுகாதார தொழில்களையும் உள்ளடக்கியது. கல்வி மற்றும் அனைத்துப் பிரிவுகளின் தொழில் நெறிஞர்களையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்துடன் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான தேசிய ஆணையம்
சுருக்கம்NCAHP
நோக்கம்துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான ஒழுங்குமுறை நிறுவனம்
தலைமையகம்புதுடில்லி
மைய அமைப்பு
ஆணையம்
சார்புகள்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம

இந்திய அரசு 2021 மார்ச் மாதத்தில் துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான தேசிய ஆணைய சட்டம் ஒன்றை கொண்டு வந்து மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் மூலம் இந்தத் துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான தேசிய ஆணைய சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.[3]

அங்கீகரிக்கப்பட்ட துறைகள் தொகு

  1. மருத்துவ ஆய்வகம் மற்றும் வாழ்வியல்
  2. காயம், தீ காய பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சை/ மயக்க மருந்து தொடர்பான தொழில்நுட்ப மருத்துவ துறை
  3. பிசியோதெரபி மருத்துவ துறை
  4. ஊட்டச்சத்து அறிவியல் மருத்துவ துறை
  5. கண் ஒளியியல் மருத்துவ துறை
  6. தொழில் முறை மருத்துவ துறை
  7. சமூக மற்றும் குணநல அறிவியல் மருத்துவ துறை
  8. மருத்துவ கதிரியக்க மற்றும் ஆய்வுப்பட தொழில்நுட்ப துறை
  9. மருத்துவ தொழில்நுட்ப மற்றும் துணை மருத்துவ துறை
  10. சுகாதார வழங்கியல் அலுவல் மற்றும் சுகாதார வழங்கியல் தொழில்முறை துறை

இந்த சட்டத்தின் படி, மேற்கண்ட சுகாதார துறைகள் இந்த குறிப்பிட்ட தேசிய ஆணையத்தில் அடங்கும்.[4]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Parliament proceedings | Parliament passes National Commission for Allied, Healthcare Professions Bill". The Hindu. 24 March 2021. https://www.thehindu.com/news/national/parliament-passes-national-commission-for-allied-healthcare-professions-bill/article34151804.ece. 
  2. NETWORK, LIVELAW NEWS (24 March 2021). "Parliament Clears Bill To Regulate Allied & Healthcare Professions; Establish National Commission & State Councils". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
  3. "பாராளுமன்ற நடவடிக்கைகள் | துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான தேசிய ஆணைய சட்ட தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்" (in en-IN). தி இந்து, ஆங்கில ஏடு. 24 மார்ச் 2021. https://www.thehindu.com/news/national/parliament-passes-national-commission-for-allied-healthcare-professions-bill/article34151804.ece. 
  4. "துணை மற்றும் சுகாதார தொழில்முறைகளுக்கான தேசிய ஆணைய சட்டம், 2021" (PDF). இந்திய அரசிதழ். இந்திய அரசாங்கம். 28 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)