துதாவா அணை (Dudhawa Dam) இந்தியாவின் சத்தீசுகரின் காங்கேர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணையின் கட்டுமானம் 1953-ல் தொடங்கி 1964-ல் முடிந்தது. இது கிகாவிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள துதாவா கிராமத்தில் மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் 24.53 மீ மற்றும் நீளம் 2,906.43 மீ ஆகும். இந்த நீர்த்தேக்கம் 625.27 சதுர கி.மீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது.[1] இது மண் அணைகளில் ஒன்றாகும். இதன் வலது பக்க அணைக்கட்டில் ஓய்வு இல்லம் உள்ளது.

துதாவா அணை
Dudhawa Dam
அதிகாரபூர்வ பெயர்துதாவா அணை
அமைவிடம்கான்கெர் மாவட்டம், சத்தீசுகர், இந்தியா
புவியியல் ஆள்கூற்று20°18′28″N 81°46′18″E / 20.30778°N 81.77167°E / 20.30778; 81.77167
கட்டத் தொடங்கியது1953-54
திறந்தது1963-64
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுமகாநதி ஆறு
உயரம்24.53 மீ
நீளம்2,906.43 மீ

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துதாவா_அணை&oldid=3781363" இலிருந்து மீள்விக்கப்பட்டது