துத்தநாக இருபாசுபைடு
துத்தநாக இருபாசுபைடு (Zinc diphosphide) என்பது ZnP2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 2.1 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்ட ஒரு சிவப்பு நிற குறைக்கடத்தி திண்மப் பொருளாகும்.[2] துத்தநாக-பாசுபரசு பிணைப்பு அமைப்பில் உள்ள இரண்டு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இதே அமைப்பிலுள்ள மற்றொரு சேர்மம் Zn3P2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட துத்தநாக பாசுபைடு சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
12037-79-5 | |
ChemSpider | 141421 |
EC number | 234-867-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
ZnP2 | |
வாய்ப்பாட்டு எடை | 127.33 கி/மோல் |
தோற்றம் | சிவப்பு படிகங்கள் |
அடர்த்தி | 3.53 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,040 °C (1,900 °F; 1,310 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம், tP24 |
புறவெளித் தொகுதி | P41212, No. 92[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதுத்தநாகத்துடன் பாசுபரசு சேர்ந்து வினைபுரிவதால் துத்தநாக இருபாசுபைடு உருவாகும்.
- 2 Zn + P4 → 2 ZnP2
கட்டமைப்பு
தொகுZnP2 அறை-வெப்பநிலை நாற்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது. சுமார் 990 °செல்சியசு வெப்பநிலையில் இது ஒற்றைச்சரிவச்சு படிக வடிவமாக மாறுகிறது.[3] இந்த இரண்டு வடிவங்களிலும், பாசுபரசு அணுக்களின் சங்கிலிகள் உள்ளன. நற்கோணக வடிவத்தில் திருகு சுழல் சங்கிலியும் ஒற்றை சரிவச்சு வடிவத்தில் அரை சுழல் சங்கிலியும் காணப்படுகின்றன.[4]
இந்த சேர்மம் Zn-Cd-P-As நான்கிணைதிற அமைப்பின் ஒரு பகுதியாகும். இவ்வமைப்பின் மற்ற இருபடி சேர்மங்களுடன் பகுதி திண்ம கரைசலை இது வெளிப்படுத்துகிறது.[5]
பாதுகாப்பு
தொகுதுத்தநாக பாசுபைடைப் போலவே துத்தநாக இருபாசுபைடும் நச்சுத்தன்மை கொண்டதாகும். ஏனெனில் இச்சேர்மம் இரைப்பை அமிலத்துடன் வினைபுரியும் போது பாசுபீன் வாயுவை வெளியிடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Litvinchuk, A. P.; Valakh, M. Ya. (2020). "Raman and infrared phonons in tetragonal ZnP2 and CdP2 crystals: A density functional study". Journal of Physics: Condensed Matter 32 (44): 445401. doi:10.1088/1361-648X/aba720. பப்மெட்:32679574. Bibcode: 2020JPCM...32R5401L.
- ↑ Hegyi, I. J.; Loebner, E. E.; Poor (Jr.), E. W.; White, J. G. (1963). "Two crystal forms of ZnP2, their preparation, structure, and optoelectronic properties". Journal of Physics and Chemistry of Solids 24 (2): 333–337. doi:10.1016/0022-3697(63)90140-9. Bibcode: 1963JPCS...24..333H.
- ↑ Ghasemi, M.; Stutz, E. Z.; Escobar Steinvall, S.; Zamani, M.; Fontcuberta i Morral, A. (2019). "Thermodynamic re-assessment of the Zn–P binary system". Materialia 6: 100301. doi:10.1016/j.mtla.2019.100301. http://infoscience.epfl.ch/record/265366.
- ↑ Hans Georg von Schnering and Wolfgang Hönle, 1994, Phosphides: Solid State Chemistry, Encyclopedia of Inorganic chemistry, Ed. R Bruce King, John Wiley and Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
- ↑ Trukhan, V. M.; Izotov, A. D.; Shoukavaya, T. V. (2014). "Compounds and solid solutions of the Zn-Cd-P-As system in semiconductor electronics". Inorganic Materials 50 (9): 868–873. doi:10.1134/S0020168514090143.