துத்தநாக காட்மியம் சல்பைடு
துத்தநாக காட்மியம் சல்பைடு (Zinc cadmium sulphide) என்பது துத்தநாக சல்பைடு (ZnS) மற்றும் காட்மியம் சல்பைடு (CdS) ஆகிய இரண்டு சேர்மங்களின் கலவையாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு ZnCdS இக்கலவையின் ஒளிர் பண்பிற்காகவே இது பல்வாறாகப் பயன்படுத்தப்படுகிறது.
பயன்
தொகு1957 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வேதியியல் படைப்பிரிவு மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பரந்த பரப்பு பிடிப்பு நடவடிக்கை என்றழைக்கப்படுகிறது. இந்நடவடிக்கையில், துத்தநாக காட்மியம் சல்பைடின் நுண்ணியதூளை இப்படைப்பிரிவு அமெரிக்காவின் பெரும் பரப்பெங்கும் தூவியது. உயிரியல் அல்லது வேதியியல் முகவர்களின் புவியியல் வீச்சு மற்றும் விரவலை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும். துத்தநாக காட்மியம் சல்பைடை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் இக்கலவை தூவப்பட்டது. அந்நேரத்தில் இக்கலவையால் எந்தவிதமான சுகாதாரக் கேடுகளும் நிகழாது என்றும் நம்பப்பட்டது. பிரிட்டன் பொதுமக்களுக்குத் தெரியாமல் அவர்களிடம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது[1]
உடல் நலக்கேடுகள்
தொகுபரப்பு பிடிப்பு நடவடிக்கையில் தூவப்பட்ட துத்தநாக காட்மியம் சல்பைடால் உடல்நலக்கேடு உண்டாகும் என்பதற்கான பதிவு ஆதாரங்கள்[2] இருக்கின்றன. இருப்பினும், 1997 இல் அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய ஆராய்ச்சி ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியாக, இந்நிலையில் தூவப்பட்ட துத்தநாகம் காட்மியம் சல்பைடால் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் என்பது குறித்த ஆதாரம் எவையும் இல்லையென அறிவிக்கப்பட்டது[3]. ஏனெனில் இக்கலவை மிகவும் குறைவான அளவே அப்பொழுது அங்கே தூவப்பட்டது. அதிக அளவிலான துத்தநாகம் காட்மியம் சல்பைடுதான் உடல்நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் இக்கலவையை பரிசோதித்துப் பார்ப்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.bbc.co.uk/insideout/west/series1/porton-down.shtml
- ↑ LeBaron, Wayne. America's Nuclear Legacy, (Google Books), Nova Publishers, 1998, p. 83–84, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1560725567).
- ↑ Leary, Warren E. "Secret Army Chemical Tests Did Not Harm Health, Report Says, த நியூயார்க் டைம்ஸ், May 15, 1997, accessed November 13, 2008.
- ↑ Moreno, Jonathan D. Undue Risk: Secret State Experiments on Humans, (Google Books), Routledge, 2001, p. 235, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415928354).