துத்தநாக டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு
துத்தநாக டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு (Zinc trifluoromethanesulfonate) என்பது C2F6O6S2Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை துத்தநாக டிரிப்ளேட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். டிரைபுளோரோமெத்தேன்சல்போனிக் அமிலத்தினுடைய துத்தநாக உப்பே துத்தநாக டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு எனப்படுகிறது. பொதுவாக இதை லூயிசு அமில வினையூக்கி யாகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணம்: சிலிலேற்றங்கள் [1] இதுவோர் வெண்மை நிறமான தூளாகும். வெவ்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கின்ற துத்தநாக டிரிப்ளேட்டு சீரற்ற முடிவுகளை தருகிறது என்ற குறிப்பிட்டு சொன்னாலும் கூட வர்த்தக முறையில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது [2][3]. தேவைப்பட்டால் டிரைபுளோரோமெத்தேன்சல்போனிக் அமிலத்தினுடன் துத்தநாக அசிட்டோநைட்ரைலில் [4] உள்ள உலோகத்தை வினைபுரியச் செய்து அல்லது மெத்தானிலில் உள்ள துத்தநாகக் கார்பனேட்டுடன் [5] வினைபுரியச் செய்து தயாரித்துக் கொள்ளலாம்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
54010-75-2 | |
ChemSpider | 94493 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 104671 |
| |
பண்புகள் | |
C2F6O6S2Zn | |
வாய்ப்பாட்டு எடை | 363.51 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- Zn + 2 HOTf → Zn(OTf)2 + H2
- ZnCO3 + 2 HOTf → Zn(OTf)2 + H2O + CO2 (OTf = CF3SO2)
மேற்கோள்கள்
தொகு- ↑ H. Jiang; S. Zhu (2005). "Silylation of 1-alkynes with chlorosilanes promoted by Zn(OTf)2: an efficient way to the preparation of alkynylsilanes". Tetrahedron Letters 46 (3): 517–519. doi:10.1016/j.tetlet.2004.10.175.
- ↑ R. J. Rahaim; J. T. Shaw (2008). "Zinc-Catalyzed Silylation of Terminal Alkynes". J. Org. Chem. 73 (7): 2912–2915. doi:10.1021/jo702557d. பப்மெட்:18331056.
- ↑ J. E. D. Kirkham, T. D. L. Courtney, V. Lee and J. E. Baldwin (2005). "Asymmetric synthesis of cytotoxic sponge metabolites R-strongylodiols A and B and an analogue". Tetrahedron 61 (30): 7219–7232. doi:10.1016/j.tet.2005.05.034.
- ↑ J. Lombard, S. Romain, S. Dumas, J. Chauvin, M.-N. Collomb, D. Daveloose, A. Deronzier and J.-C. Leprêtre (2005). "Tetranuclear Polypyridyl Complexes of RuII and FeII: Synthesis, Electrochemical, Photophysical and Photochemical Behaviour". European Journal of Inorganic Chemistry 2005 (16): 3320–3330. doi:10.1002/ejic.200500106.
- ↑ E. J. Corey; K. Shimoji (1983). "Magnesium and zinc-catalyzed thioketalization". Tetrahedron Letters 24 (2): 169–172. doi:10.1016/S0040-4039(00)81357-X.