துனி ஆறு (Tuni River)(பாஷிசுதா கங்கா என்றும் அழைக்கப்படுகிறது) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் சிறிய துணை ஆறாகும். துனி ஆறானது உலகின் மிகப்பெரிய நதி தீவான மாஜூலியின் நடுவில் பாய்கிறது. அசாமின் பல பண்டைய சத்திரங்களில் ஒன்றான ஸ்ரீ ஸ்ரீ போக்பூர் சத்ரா துனி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. துனி ஆறு பாஷிஸ்தா கங்கா என்றும் அழைக்கப்படுகிறது. [1]

துனி ஆறு
Bashistha Ganga
துனி ஆறு is located in அசாம்
துனி ஆறு
துனி ஆறு is located in இந்தியா
துனி ஆறு
அமைவு
Stateஅசாம்
மாவட்டம்மாஜுலி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மொக்குதி 1
 ⁃ அமைவுமாஜுலி மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்26°56′19.0″N 94°10′27.4″E / 26.938611°N 94.174278°E / 26.938611; 94.174278
முகத்துவாரம்பிரம்மபுத்திரா ஆறு
 ⁃ அமைவு
போக்பூர் சத்ரா, மாஜுலி மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்
26°55′06.4″N 94°09′13.0″E / 26.918444°N 94.153611°E / 26.918444; 94.153611
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிதுனி ஆறு - பிரம்மபுத்திரா ஆறு

நிலவியல் தொகு

துனி ஆறு பிரம்மபுத்திரா நதியிலிருந்து உருவாகி பிரம்மபுத்திராவுடன் இணையும் இயற்கையான ஆறாகும். இது மாஜுலி மாவட்டத்தில் உள்ள மொக்குந்தியில் உருவாகிறது. துனி ஆற்றின் ஓட்டம் தடுக்கப்பட்டு, தேங்கி நிற்கும் குட்டையாக தற்பொழுது உள்ளது. இது பிரம்மபுத்திரா ஆற்றுடன் மாஜீலியில் உள்ள போக்பூர் சத்ரா அருகே இணைகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Bhogpur Satra Details". Majuli Cultural Landscape Management Authority (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
  2. "Erosion activity on Majuli – the largest river island of the world" (PDF). India Environment Portal. Archived from the original (PDF) on 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துனி_ஆறு&oldid=3558904" இலிருந்து மீள்விக்கப்பட்டது