துன் அலி

மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா

பெண்டகாரா துன் அலி அல்லது பெண்டகாரா சிறீ நரா திரஜா துன் அலி (ஆங்கிலம்: Bendahara Tun Ali; மலாய் மொழி: Bendahara Sri Nara Diraja Tun Ali; ) என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா ஆவார். மலாக்கா சுல்தானகத்தில் பெண்டகாரா (Bendahara) எனும் பதவி ஒரு பிரதமருக்கு உரிய பதவியாகும்.

துன் அலி
Tun Ali
மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா (தலைவர்)
பதவியில்
1445–1456

இவர் மலாக்காவின் இசுலாமியத் தமிழ்த் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவர் பதவிக்கு வரும் போது சிறீ பரமேசுவர தேவா சா (Raja Sri Parameswara Dewa Shah) என்னும் இந்து அரசர் மலாக்கா சுல்தானகத்தின் அரியணையில் இருந்தார்.

பரமேசுவர தேவா சா என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது சுல்தான் ஆகும். இவரின் அசல் பெயர் அபு சாயிட் சா (Abu Syahid Shah) எனும் ராஜா இப்ராகிம் (Raja Ibrahim). இவர் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார்.

பொது

தொகு

மற்ற சான்றுகளின்படி, துன் அலி மற்றும் அவரின் மருமகன், ராஜா காசிம் (Raja Kassim) இருவரும்; ராஜா ரோக்கான் (Raja Rokan) என்பவரைக் கொலை செய்ய சதி செய்தனர். ராஜா ரோக்கானை அரண்மனை அதிகாரிகளுக்குப் பிடிக்காதது ஒரு முக்கியக் காரணமாகும்.

ராஜா ரோக்கான் மீது தாக்குதல் நடந்த போது அவர் மலாக்கா மன்னர் பரமேசுவர தேவா ஷா அவர்களின் அருகில் இருந்தார். ஆத்திரம் அடைந்த ராஜா ரோக்கான், மன்னர் பரமேசுவர தேவா சா-வை கத்தியால் குத்தினார்.

பரமேசுவர தேவா ஷா

தொகு

துன் அலியும் ராஜா காசிமும் ஆகியோர் மன்னர் பரமேசுவர தேவா ஷா-வை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்தனர். ராஜா காசிம் மலாக்காவின் மன்னராக நியமிக்கப்பட்டார். அவரை துன் அலிதான் மன்னராக நியமித்தார்.

ராஜா காசிம் மலாக்காவின் மன்னரானது தன் பெயரை சுல்தான் முசாபர் ஷா (Sultan Muzaffar Shah) என்று மாற்றிக் கொண்டார்.

துன் அலி பதவி விலகல்

தொகு

பெண்டகாரா பாடுக்கா ராஜா துன் பேராக்கிற்கு (Bendahara Paduka Raja Tun Perak) ஆதரவாக, சுல்தான் முசாபர் ஷாவின் ஆலோசனையின் பேரில், துன் அலி 1446-இல் பதவி விலகினார்.

இவர் தன் மனைவியுடனான திருமண வாழ்வை முறித்துவிட்டு, மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Royal Asiatic Society of Great Britain and Ireland Malaysian Branch, Singapore, Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society (1961), pg 73 TUN ALI (2). 27.6 Oldest son of Tun Tahir (1) / 33.1 Betrothed to Tun Fatimah / 33.2 Marries, has daughter Tun Terang / 33.12 Put to death.

மேலும் படிக்க

தொகு

1. வரலாறு குறித்த மலேசிய அமைச்சகத் தகவல் (Modul Latihan Pengajaran dan Pembelajaran Sejarah, Pusat Perkembangan Kurikulum Kementerian Pendidikan Malaysia.,) (மலாயில்)

2. Malaysia Kita, International Law Book Services, Kuala Lumpur, 2005

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்_அலி&oldid=3947575" இலிருந்து மீள்விக்கப்பட்டது