துப்புரவு (Sanitation) என்பது கழிவுகளையும், பேரிடர் பொருள்களையும் முறையாக மேலாண்மை செய்து நலத்தை ஊக்குவிக்கப் பயன்படும் செயலேற்பாடுகள் ஆகும். மலம், சிறுநீர், கழிவு நீர், திடக்கழிவு போன்றவற்றை அகற்றி தூய்மிப்புச் செய்வது பல்வேறு வகை நோய்கள் நலக் கேடுகள் உருவாவதையும், பரவுவதையும் தடுக்கும். இது அடிப்படை மனிதத் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒருவருக்கு நோய் தொற்றுகிறது என்றால் அங்கு நோய்க்காரணி, ஓம்புயிர், சுற்றுச்சூழல் ஆகியவற்றிடையே இடைவினை நிகழ்ந்திருக்கிறது என்று பொருளாகும். நோய்க்காரணி இடம் பெயர்வதற்கு முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் எனலாம். எனவே, சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருப்பது தேவையாகிறது[1].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்புரவு&oldid=3580740" இலிருந்து மீள்விக்கப்பட்டது