கழிவுநீர்

(கழிவு நீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கழிவுநீர் என்பது வீட்டுக்கழிவு, வணிகக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்த நீரினைக் குறிக்கும். பொதுவாக இது நகராட்சியின் கழிவு வாய்க்கால்களில் செல்லும் நீரைக் குறிக்கும். இந்த வாய்க்கால்கள் கழிவுநீரை பல வகையான மூலங்களிலிருந்து பெறுகின்றன.

மூலங்கள்தொகு

 • மனிதக் கழிவுகள் (மலம், சிறுநீர் முதலியன)
 • பாத்திரம் கழுவும் நீர், துவைக்கும் போது வெளியேறும் நீர்
 • கட்டிடங்களின் மீது படிந்து வரும் மழைநீர்
 • வீடு/கட்டிடங்களில் மிகும் சாயம், உயவு எண்ணெய் போன்ற பொருட்கள்
 • தொழிற்சாலைக் கழிவுகள்

கழிவுநீரில் அடங்கியுள்ள பொருட்கள்தொகு

 • நீர் (95%க்கும் மேலாக)
 • பாக்டீரியா, புழுக்கள் முதலானவை
 • உணவு, காகிதம், மலம், முடி முதலான கரிமப் பொருட்கள்
 • யூரியா முதலான கரையக்கூடிய கரிமப்பொருட்கள்
 • உலோக/மணற் துகள்கள்
 • நச்சுப்பொருட்கள்
 • சாயம் முதலான வேதிப்பொருட்கள்
 • மீத்தேன் முதலான வாயுக்கள்
 • பூச்சிகள் முதலான உயிரினங்கள்
 • ஊசிகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் முதலான திடக்கழிவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழிவுநீர்&oldid=3457146" இருந்து மீள்விக்கப்பட்டது