தும்பலஅள்ளி அணை
தும்பலஅள்ளி அணை என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.[1] இது பாலக்கோடு வட்டம் தும்பலள்ளிக்கு 14.கி.மீ தென்கிழக்கே பூலம்பட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1983 இல் கட்டி முடிக்கப்பட்டது இதன் கொள்ளளவு 131 மில்லியன் கன அடிகள்.[2] நீர்பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதி 883.82 எக்டேர் நிலமாகும்.[3] இதன் பரப்பளவு சுமார் 500 ஏக்கர் ஆகும். பஞ்சப்பள்ளி, ஜெர்த்தலாவ் போன்ற மலைகளில் இருந்து கனமழை காலங்களில் தும்பல அள்ளி அணை நீராதாரம் பெற்று வந்தது. பின்னர் நீராதாரம் வழங்கும் பகுதிகளில் தடுப்பணைகள் உருவாக்கப்பட்ட நிலையில் தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கிடைக்காமல் போய், ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அணையானது தொடர்ந்து வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது.[4]
குறிப்புகள்
தொகு- ↑ எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
- ↑ http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 482
- ↑ "20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தும்பலஅள்ளி அணை: எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டத்திற்கு ஏங்கும் விவசாயிகள்". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். 1 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)