தும்பளை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

தும்பளை (Thumpalai) என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பருத்தித்துறைக்கு வடகிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தும்பளை
Thumpalai
கிராமம்
தும்பளை is located in இலங்கை
தும்பளை
தும்பளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°49′N 80°15′E / 9.817°N 80.250°E / 9.817; 80.250
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுபருத்தித்துறை

பெயர்க்காரணம்

தொகு

தும்பளை என்னும் பெயர் "தும்பு + அளை" என்பதிலிருந்து மருவி வந்திருக்க வேண்டும். அளை என்பது வாய்க்கால் அல்லது ஓடையைக் குறிக்கும் சொல்லாகும். முற்காலத்தில் தும்புக் கைத்தொழிலே இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கலாமென இடப்பெயர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[2]

என்றி டிரைமன் என்பவரால் 1893-இல் வெளியிடப்பட்ட "இலங்கைத் தாவரங்கள், ஒரு கையேடு" (A Handbook to the Flora of Ceylon), தும்பளை என்பது "வத்திக்கா ஒப்சிக்கியூரா" (Vatica obscura) என்ற இலங்கைக்கு சொந்தமான ஒரு பெரிய மரத்தின் தமிழ்ப் பெயர் என்று பதிவு செய்கிறது.[3]

இங்குள்ள கோவில்கள்

தொகு
  • தம்புருவளை சித்தி விநாயகர் கோவில்
  • தும்பளை நெல்லண்டை அம்மன் கோவில்
  • தும்பளை கற்கோவளம் வீரபத்திரர் கோயில்
  • தும்பளை முத்துமாரி அம்மன் கோவில்
  • தும்பளை புனித லூர்து அன்னை தேவாலயம்

இங்குள்ள பாடசாலைகள்

தொகு
  • தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயம்

இங்கு பிறந்தவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
  2. இ. பாலசுந்தரம். 1989. இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2: வடமராட்சி - தென்மராட்சி. யாழ்ப்பாணம்: வல்லிபுர இந்து கல்வி, பண்பாட்டு சங்கம். பக். 33.
  3. The (place of) Thumpa’lai trees (Vatica obscura), தமிழ்நெட்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பளை&oldid=3920108" இலிருந்து மீள்விக்கப்பட்டது