தும்மனப்பள்ளி
தும்மனப்பள்ளி ( Thummanapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊர் அட்டக்குறுக்கி ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 55 கிலோ மீட்டரும், சூளகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 299 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் தெடர்வண்டி நிலையமாகும்.[1]
தும்மனப்பள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி தொத்த மக்கள் தொகை 2462, இதில் 1235 பேர் ஆண்கள், 1227 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 64.63 % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 71.98 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 57.35 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியதாக உள்ளது.[2]
குறிப்பு
தொகு- ↑ "Thummanapalli". அறிமுகம். http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Shoolagiri/Thummanapalli. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ "Thummanapalli Population - Krishnagiri, Tamil Nadu". http://www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=