துரப்பணம் (drill) என்பது வட்டத் துளைகள் போடவும் பொருத்திகளை முடுக்கவும் பயன்படும் முதன்மையான கருவியாகும். இதில் ஒரு துரப்பண முளையோ அல்லது திருகு முடுக்கியோ தேவைப்படும் பயன்பாட்டைப் பொறுத்து பொருத்தப்படும். இந்த இணைப்பு அலகு ஒரு கவ்வியால் நிலைநிறுத்தப்படும். சில விசைத் துரப்பணங்கள் சமட்டுதல் பணியும் செய்யும்.

துரப்பணங்கள் அளவிலும் வேகத்திலும் திறனிலும் வேறுபடும். கம்பிவழி மிந்திறனால் இயங்கும் துரப்பணங்கள் குறைந்து கம்பியில்லா மின்கல அடுக்கில் இயங்கும் துரப்பணங்கள் பயன்பாட்டில் பெருகி வருகின்றன.

துரப்பணங்கள் தச்சுவேலை, பொன்மவேலை, எந்திரக் கருவிக் கோப்பு, கட்டுமானம் போன்ற பணிகளுக்குப் பயன்படுகின்றன. சிறப்பு வடிவமைப்பு வகைகள் மருத்துவம், விண்வெளி, குறுநிலைப் பயன்பாடுகளில் ஆளப்படுகின்றன.

வகைகள்

தொகு
பொருள் துளைப்பு அலகு வகை கொள்ளளவு
மரவகை துரப்பணம் 78 அங் (22 mm)
மத்து 1+14 அங் (32 mm)
திருகி 12 அங் (13 mm)
தானூட்டி 1+38 அங் (35 mm)
துளை அரம்பம் 2 அங் (51 mm)
பொன்மவகை திருகி 12 அங் (13 mm)
துளை அரம்பம் 1+38 அங் (35 mm)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Drill
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரப்பணம்&oldid=3267834" இலிருந்து மீள்விக்கப்பட்டது