துராகோ

பறவை குடும்பம்

துராகோக்கள் என்பது முசோபகிடாய் (இலக்கிய ரீதியாக "வாழைப்பழ உண்ணிகள்") பறவை குடும்பத்தில் உள்ள பறவைகள் ஆகும். இக்குடும்பத்தில் வாழை உண்ணிகள் மற்றும் தூரப்போ பறவைகள் உள்ளன. தெற்கு ஆப்பிரிக்காவில் துராகோக்கள் மற்றும் தூரப்போ பறவைகள் பொதுவாக லோயரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பறவைகளால் அவற்றின் நான்காவது விரலை வெளியே நீட்டவும் உள்ளிழுக்கவும் முடியும். எப்போதும் முன்னோக்கியே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்கள் சில உயிரினங்களில் இணைந்து உள்ளன. இக்குடும்ப பறவைகளுக்கு கொண்டைகள் மற்றும் நீண்ட வால்கள் உள்ளன. துராகோக்கள் விசித்திரமான மற்றும் தனித்துவமான நிறமிகளை கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன. இந்த நிறமிகள் பிரகாசமான பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை இவற்றின் இறகுகளுக்கு தருகின்றன.

துராகோக்கள் மற்றும் உறவினர்கள்
புதைப்படிவ காலம்:
ஒலிகோசீன் - ஹோலோசீன், 24–0 Ma
தென்னாபிரிக்காவின் ஈடனின் பறவைகள் எனப்படும் பட்சிகள் வளர்க்கும் வீட்டில் ஒரு கினி துராகோ (Tauraco persa)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
ஒடிடிமார்பே
வரிசை:
சீபோம், 1890
குடும்பம்:
லெஸ்ஸன், 1828
பேரினங்கள்
  • கோரிதயோலா
  • கோரிதயிசோயிடெஸ்
  • க்ரினிஃபெர்
  • ருவென்சோரோர்னிஸ்
  • முசோபகா
  • டவுரகோ
வேறு பெயர்கள்
  • அபோபெம்சிடாய் ப்ரோட்கோர்ப், 1971b
  • வெஃப்லின்டோர்னிதிடாய் கசின், 1976

மனிதர்களுடன் தொடர்பு

தொகு

துராகோக்களின் சிவப்பு நிற பறக்கும் சிறகுகள் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள அரச குடும்பங்கள் மற்றும் தலைவர்களின் தகுதி சின்னங்களாக பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படுகின்றன. இவை சுவாசி மற்றும் ஜுலு அரச குடும்பங்களால் மதிக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன.[1]

உசாத்துணை

தொகு
  1. ITS Magazine, autumn 2003 (20), www.turacos.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=துராகோ&oldid=3536467" இலிருந்து மீள்விக்கப்பட்டது