துருக்மெனாபாத்

துருக்மெனிஸ்தான் நகரம்

துருக்மெனாபாத் (Türkmenabat) என்பது துருக்மெனிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் லெபாப் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந் நகரம் 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி இது சுமார் 254,000 மக்களைக் கொண்டிருந்தது. 1989 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் 161,000 ஆக இருந்தது.[1]

புவியியல்

தொகு

உஸ்பெகிஸ்தானின் எல்லைக்கு அருகே அமு தர்யா ஆற்றின் கரையில் 187 மீ (614 அடி) உயரத்தில் துருக்மெனாபாத் அமைந்துள்ளது. இந்த நகரம் லெபாப் மாகாணத்தின் மையத்தில் உள்ளது. இது துர்க்மெனிஸ்தானில் மேரி, அஹல், தகோகுஸ் ஆகிய மூன்று மாகாணங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த மாகாணம் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனும் எல்லையாக உள்ளது.

துருக்மெனாபாத்திற்கு தெற்கே சுமார் 70 கிலோமீற்றர் (43 மைல்) தொலைவில் உள்ள கிழக்கு கரகம் பாலைவனம் இயற்கை உயிர்க்கோள காப்பகமாகும். இது பாலைவன முதலைகளுக்கு புகழ் பெற்றது.

வரலாறு

தொகு

துருக்மெனாபாத் தற்போது ஒரு நவீன தொழிற்துறை நகரமாக வளர்ச்சி அடைந்து இருந்தாலும் இது 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. பண்டைய காலங்களில், இது அமுல் (ஈரானிய நகரமான அமோலில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்) என்று அழைக்கப்பட்டது. அமு தர்யா நதி என்பது இந்த பண்டைய நகரத்தின் பெயரால் பெயரிடப்பட்ட அமுல் நதியைக் குறிக்கிறது. புகாரா , கிவா மற்றும் மெர்விற்கு செல்லும் பெரிய பட்டுப்பாதையின் 3 பாதைகளுக்கு இடையில் ஒரு குறுக்குவெட்டில் துருக்மெனாபாத் மையமாக அமைந்திருந்தது.[சான்று தேவை] பல நூற்றாண்டுகளாக அமுல் என்பது புகாராவின் ஒப்பீட்டளவில் பின்தங்கிய உசுபெகிய நிலப்பிரபுத்துவ கானேட்டின் (பின்னர் அமீரகம்) ஒரு முக்கியமான நகரமாகும்.

உருசிய சாம்ராஜ்யம் மத்திய ஆசியாவை கைப்பற்றி துருக்கெஸ்தானை இணைக்கத் தொடங்கியபோது புகாரா அமீரகம், அமுல் என்பன உருசியாவிடம் சரணடைந்தன. நவீன நகரம் 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கோசாக் உருசியர்கள் உல்காவில் குடியேறியபோது தற்போதைய துருக்மெனாபாத்தின் கிழக்குப் பகுதியானது புதிய சார்ட்ஜுய் என பெயரிடப்பட்டது. [சான்று தேவை]

சோவியத் காலத்தில் தொடருந்துகளின் சந்தியாக திகழ்ந்ததாலும், அமு தர்யா பிராந்தியத்தின் அதிக வளத்தினாலும் நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் விவசாய பொருட்களுக்கான முக்கிய வர்த்தக மையமாக அமைந்தது. நகரில் உணவு பதப்படுத்துதல், நெசவு (பருத்தி பதப்படுத்தல் மற்றும் பட்டு) என்பவற்றுக்கான தொழிற்சாலைகள் உள்ளன. சோவியத் காலத்தில் துர்க்மெனிஸ்தானின் தொழில்துறை மற்றும் போக்குவரத்து மையமாக சார்ட்ஜோ திகழ்ந்தது. துருக்மெனிஸ்தானின் சுதந்திரத்திற்கு பின்பு இது தொடர்பான பெரும்பாலான பணிகள் அசுகாபாத்திற்கு மாற்றப்பட்டன. சில மூடப்பட்டன.

காலநிலை

தொகு

துருக்மெனாபாத் குளிர்ந்த பாலைவன காலநிலையை ( கோப்பன் காலநிலை வகைப்பாடு BWk ) கொண்டுள்ளது. குளிர்ந்த குளிர்காலம் மற்றும் மிகவும் வெப்பமான கோடைகாலங்களைக் கொண்டுள்ளது. மழைவீழ்ச்சி மற்றும் ஒளி பொதுவாக ஒழுங்கற்றது.[2]

கலாச்சாரம்

தொகு

மொழி

தொகு

துருக்மெனாபாத் பிராந்தியத்தின் மக்கள் பெரும்பாலும் துருக்மென் மற்றும் உசுபெகிய மொழிகளை பேசுகின்றனர். இது அப்பகுதியின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது. இந்த பேச்சுவழக்கு பெரும்பாலும் துர்க்மெனாபாத் மற்றும் லெபாப்பின் வடக்கு மாகாணங்களில் பேசப்படுகிறது.

உலக சந்தை

தொகு

துருக்மெனாபாத் அதன் சந்தைகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.[3]  மிகப் பெரிய சந்தையாகும். இது “துன்யா பசார்” (உலக சந்தை) என்று பெயரில் அழைக்கப்படுகிறது. கோக் பசார் மற்றும் மெர்கசி பசார் ஆகியவை மற்ற நன்கு அறியப்பட்ட சந்தைகள் ஆகும். உள்ளூர், சீன, துருக்கிய, உசுபேகிய மற்றும் உருசிய பொருட்களை வாங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் துருக்மெனாபாத்திற்கு வருகை தருகின்றனர். துன்யா பசாரில் நகைகள், வீட்டு உபகரணங்கள், உடைகள், நாட்குறிப்புகள், மகிழுந்துகள் மற்றும் பிற பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. [சான்று தேவை]

போக்குவரத்து

தொகு

துருக்மெனாபாத் நகரமானது துர்க்மெனின் தலைநகரான அசுகபாத் மற்றும் துருக்மென் துறைமுக நகரமான துருக்மென்பாசியுடன் துருக்மெனிஸ்தான் ஏர்லைன்ஸ் மற்றும் எம் 37 நெடுஞ்சாலையினால் இணைக்கப்பட்டுள்ளது. துருக்மெனிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் துர்க்மெனாபத் தொடருந்தினால் இணைக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "Population census 1989". Archived from the original on 2012-01-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. ""Chardzhou, Turkmenistan". Climatebase". climatebase.ru. பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  3. ""Türkmenabat"". Archived from the original on 2017-11-08.


"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்மெனாபாத்&oldid=3587248" இலிருந்து மீள்விக்கப்பட்டது