துருவா இனக்குழு

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

துருவா இனக்குழு (Duruwa) இந்திய மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் காணப்படும் ஒரு பழங்குடி இனக்குழுவாகும். துர்வா அல்லது தருவா என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். திராவிட மொழி எனப்படும் பார்சி அல்லது துருவா மொழி தங்களுடைய சொந்தக் களத்தில் இம்மக்களால் பயன்படுத்தப்படுகிறது. [1]

துருவா
Dhurwa
துர்வா அல்லது தருவா
சத்தீசுகரில் துருவா இன மனிதன் புல்லாங்குழல் வாசிக்கிறார்
மதங்கள்இந்து சமயம்
மொழிகள்துருவா மொழி
நாடுஇந்தியா
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
சத்தீசுகர், ஒடிசா
மக்கள் தொகைஒடிசா – 18,151 (2011)
நிலைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்

கண்ணோட்டம் தொகு

பார்சி இவர்களின் சொந்த மொழியாக இருந்தாலும், உள்ளூர் மொழியான ஒடியா, சத்தீசுகர்கி மொழி ஆகியவற்றை இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனால் இந்தி, தெலுங்கு, குர்மலி ஆகியவற்றைப் பேசுகிறார்கள் மற்றும் ஒடியா, இந்தி அல்லது தெலுங்கு எழுத்துகளை குழுக்களாக தொடர்பு கொள்ள இவர்கள் பயன்படுத்துகின்றனர். [2]

சத்தீசுகரில் துருவா மக்கள் கோண்ட்டு பழங்குடியினரின் கீழ் வகைப்படுத்தப்படுகிறார்கள், ஆனால் ஒடிசாவில் இவர்கள் ஒரு தனி பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளனர். [3]

கலாச்சாரம் தொகு

இந்த இணத்திலுள்ள ஆண்கள் தங்களின் மனைவியாக தன்னுடன் பிறந்த ஒரே தாய் வயிற்றுத் தங்கையையே திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Dharua". SCSTRTI (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
  2. Ota, A.B. (2016). Dharua. Bhubaneswar: Scheduled Castes & Scheduled Tribes Research and Training Institute. https://repository.tribal.gov.in/handle/123456789/73855. பார்த்த நாள்: 20 November 2021. 
  3. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  4. https://tamil.news18.com/amp/photogallery/national/a-dhurwa-tribe-in-chhattisgarh-allows-brother-and-sister-to-get-married-1358309.html%7Cதமிழ் நியூஸ்18
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவா_இனக்குழு&oldid=3899538" இலிருந்து மீள்விக்கப்பட்டது