துரூங் சன் கேளையாடு
துரூங் சன் கேளையாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | முந்தியாகசு
|
இனம்: | மு. துரூங்சோனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
முந்தியாகசு துரூங்சோனென்சிசு (கியோ மற்றும் பலர் 1997) | |
துரூங் சன் கேளையாடு (Truong Son muntjac) அல்லது அன்னமைட் கேளையாடு (முந்தியாகசு துரூங்சோனென்சிசு) என்பது கேளையாடு பேரினமான முந்தியாகசினைச் சார்ந்த மான் சிற்றினமாகும். இது 15 கிலோ எடை வரை வளரக்கூடிய மிகச்சிறிய கேளையாடு சிற்றினங்களில் ஒன்றாகும். இது இந்திய கேளையாடின் பாதி அளவு இருக்கும். இது 1997-இல் வியட்நாமில் உள்ள துரூங் சன் (அன்னமைட்) மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டது.
மண்டை ஓடுகள் மற்றும் கிராமவாசிகள் தெரிவித்த விளக்கங்களின் மூலம் இது அடையாளம் காணப்பட்டது. இவர்கள் இதை சம்சோய் காகூங் அல்லது "ஆழமான, அடர்ந்த காட்டில் வாழும் மான்" என்று அழைக்கிறார்கள். இது 400-1000 மீட்டர் உயரப் பகுதிகளில் வாழ்கிறது. இங்கு இதன் சிறிய அளவு அடர்த்தியான அடிமரங்கள் வழியாக எளிதாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Timmins, R.; Duckworth, J.W. (2016). "Muntiacus truongsonensis". IUCN Red List of Threatened Species 2016: e.T44704A22154056. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T44704A22154056.en. https://www.iucnredlist.org/species/44704/22154056. பார்த்த நாள்: 19 November 2021.
- Truong Son Muntjac, WWF இந்தோசீனா.
- விலங்கு தகவல் - Truong Son Muntjac
- துரூங் சன் கேளையாடு at the Encyclopedia of Life