துர்கா பிரசாத் யாதவ்
துர்கா பிரசாத் யாதவ் (Durga Prasad Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். யாதவ் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[2]
துர்கா பிரசாத் யாதவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் ஆசம்கர் சட்டமன்றத் தொகுதி (உ.பி.) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2017 | |
பதவியில் மார்ச் 2012 – மார்ச் 2017 | |
பதவியில் மே 2007 – மார்ச் 2012 | |
பதவியில் பிப்ரவரி 2021 – மே 2007 | |
பதவியில் அக்டோபர் 1996 – மார்ச் 2017 | |
முன்னையவர் | அமந்தீப் ராய் |
பதவியில் சூன் 1991 – திசம்பர் 1992 | |
பின்னவர் | இராஜ் பாலி யாதவ் |
பதவியில் திசம்பர் 1989 – ஏப்ரல் 1991 | |
பதவியில் மார்ச் 1985 – நவம்பர் 1989 | |
முன்னையவர் | இராம் குன்வார் சிங் |
தொகுதி | ஆசம்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சனவரி 1954[1] அகோபதி, ஆசம்கர் மாவட்டம், உத்தரப்பிரதேசம் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | சுமன் யாதவ் (தி. 1983) |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | 95/96 பி பகுதி, தருல்சபா, இலக்னோ, உத்தரப்பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | சிபில் தேசியக் கல்லூரி, ஆசாம்கர், (இளங்களை, கோரக்பூர் பல்கலைக்கழகம்) சிபில் தேசியக் கல்லூரி, ஆசாம்கர், (இளங்கலைச் சட்டம்., வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம்) |
வேலை | விவசாயம் |
தொழில் | அரசியல்வாதி |
வாழ்க்கை
தொகுயாதவ் 1954ஆம் ஆண்டு சனவரி 12ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள ஆகோபட்டியில் ராம் தியான் யாதவின் மகனாகப் பிறந்தார். இவர் 5 சூலை 1983-ல் சுமன் யாதவை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் 1981-ல் கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆசம்கரில் உள்ள சிப்லி தேசியக் கல்லூரியில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார். 1991-ல் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆசம்கர் சிப்லி தேசியக் கல்லூரியில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார்.[3]
அரசியல்
தொகுதுர்கா பிரசாத் யாதவ் 1985ஆம் ஆண்டு முதல் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் ஆசம்கர் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
வகித்தபதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | 1985 | 1989 | சட்ட மன்ற உறுப்பினர், 09வது சட்டப் பேரவை | |
02 | 1989 | 1991 | உறுப்பினர், 10வது சட்டமன்ற உறுப்பினர் | |
03 | 1991 | 1993 | உறுப்பினர், 11வது சட்டமன்ற உறுப்பினர் | |
04 | 1996 | 2002 | உறுப்பினர், 13வது சட்டமன்ற உறுப்பினர் | |
05 | 2002 | 2007 | உறுப்பினர், 14வது சட்டமன்ற உறுப்பினர் | |
06 | 2007 | 2012 | உறுப்பினர், 15வது சட்டமன்ற உறுப்பினர் | |
07 | 2012 | 2017 | உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர் | |
08 | 2017 | 2022 | உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர் | |
09 | 2022 | பதவியில் | உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர்[5] |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Member Profile". official website of Legislative Assembly of Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 8 May 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Durga Prasad(Samajwadi Party(SP)):Constituency- AZAMGARH(AZAMGARH) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ "Lok Sabha 2004 - Durga Prasad Yadav". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS24347.htm?ac=347