துர்துசுகேத்தியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்
துர்துசுகேத்தியா மீதான மங்கோலியப் படையெடுப்பு என்பது தற்போதைய செச்சினியா மற்றும் இங்குசேத்தியா ஆகிய நிலப்பகுதிகளின் மீது மங்கோலியர்களால் 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட இரண்டு நீண்ட, பெருமளவிலான படையெடுப்புங்களைக் குறிப்பதாகும். மேற்கில் ஆலனியா, கிழக்கில் சிம்சிர் மற்றும் தெற்கில் சியார்சியாவின் கூட்டணி அரசான துர்துசுகேத்தியா ஆகியவற்றின் நிலப்பரப்புகள் மீது இந்தப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன.[1][not in citation given][2][3] இந்தப் படையெடுப்புகள் பெரும் அழிவையும் மனித இழப்புகளையும் துர்துசுகேத்தியாவிற்கு ஏற்படுத்தின. ஆனால் இதற்குப் பிறகு அவர்கள் எப்படிப்பட்ட மக்களாக உருவாகினர் என்பதையும் பெருமளவுக்குத் தீர்மானித்தன. செச்சினியர்கள் மற்றும் இங்குசேத்தியர்களின் முன்னோர்கள் மங்கோலியர்களுடன் சண்டையிட்டு வெல்ல முடிந்த சில மக்களில் ஒருவராகக் கருதப்படுகின்றனர். அவர்கள் ஒருமுறையல்ல இருமுறை இதைச் செய்தனர். எனினும் இந்த வெற்றியானது அவர்களுக்குப் பெரும் சேதத்துடன் தான் வந்தது. அவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த அரசுகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. அவர்களது முந்தைய நிர்மாணிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் இந்த நிலை தான் ஏற்பட்டது. செச்சின் மற்றும் இங்குஷ் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளாக இந்தப் படையெடுப்புகள் கருதப்படுகின்றன. செச்சினியா, இங்குசேத்தியா மற்றும் அவற்றின் மக்கள் மீது நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகளாக இப்படையெடுப்புகள் திகழ்ந்தன.
மங்கோலியப் படையெடுப்புகளின் நீண்டகால விளைவுகள்
தொகுநாட்டுப்புறக் கதைகள்
தொகுஎண்ணிக்கையில் அதிகமாக இருந்த மற்றும் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த படையெடுப்பாளர்களுக்கு எதிரான போராட்டங்களானவை சாதாரண மக்கள் மீது ஏராளமான சுமையை ஏற்படுத்தியது. தற்போதைய செச்சின் மற்றும் இங்குஷ் நாட்டுப்புறக் கதைகளில் ஒரு முக்கியமான பகுதியாக இந்தப் போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதில் ஒரு கதையானது, அர்குனில் வாழ்ந்த முன்னாள் குடிமக்கள், முதல் படையெடுப்பின்போது எவ்வாறு தெபுலோசுமதா மலைச் சரிவை வெற்றிகரமாகத் தற்காத்தனர் என்பதைக் கூறுகிறது. பிறகு அப்பகுதிக்கு திரும்பி வந்து மீண்டும் அதைக் கைப்பற்றினர். அம்ஜத் ஜய்மோவுக்கா என்கிற சிர்காசிய வரலாற்றாளர், பியாண் டி கார்பின் உள்ளிட்ட மேற்கு நாடுகாண் பயணிகளின் வரலாற்றுப் பதிவுகளுடன் இந்த நாட்டுப்புறக் கதைகளில் பல ஒத்துப் போகின்றன என்று கூறியுள்ளார். பியாண் டி கார்பின் 1253ஆம் ஆண்டு ஆலன்களின் ஒரு பகுதியினர் ஒரு மலையை 12 ஆண்டுகளாகத் தற்காத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு ஐ. ஏ. கிராஸ்னோ முதலில் பதிவு செய்த செச்சின் நாட்டுப்புறக் கதைகளுடன் இந்தக் குறிப்புகள் தொடர்புப்படுத்தப்படுகின்றன. அக்கதை இடிக் என்ற முதிர்ந்த வேட்டைக்காரன் ஒருவன் தன்னுடைய கூட்டாளிகளுடன் ஒரு மங்கோலிய-தாதர் நாடோடிக் கூட்டத்திற்கு எதிராக 12 ஆண்டுகளுக்கு ஒரு மலையைத் தற்காத்ததைப் பின்வருமாறு கூருகிறது:
அடுத்த ஆண்டு கோடை காலத்தின் தொடக்கத்தின்போது மேட்டுநில மக்களை அழிப்பதற்காக எதிரி நாடோடிக் கூட்டங்கள் மீண்டும் வந்தன. ஆனால் இந்த ஆண்டும் கூட அவர்கள் மலையைக் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்தனர். அங்கு தான் வீரம் நிறைந்த செச்சினியர்கள் குடியமர்ந்திருந்தனர். இந்த யுத்தம் நடந்து 12 ஆண்டுகள் நடந்தது. செச்சினியர்களின் முதன்மைச் செல்வமான கால்நடைகள் எதிரிகளால் திருடப்பட்டன. பல ஆண்டுகளுக்குக் கடுமையான போராட்டத்தால் சோர்வடைந்த செச்சினியர்கள் எதிரியின் கருணைக்கான உத்தரவாதத்தை நம்பினர். மலையிலிருந்து இறங்கி வந்தனர். ஆனால் மங்கோலிய-தாதர்கள் வஞ்சகமாக அவர்களில் பெரும்பாலானவர்களைக் கொன்றனர். இதிலிருந்து தப்பித்தவர்கள் இடிக் மற்றும் அவரது சில கூட்டாளிகள் மட்டுமே. அவர்கள் நாடோடிகளை நம்பவில்லை. மலையிலேயே தங்கி இருந்தனர். 12 ஆண்டு கால முற்றுகைக்குப் பிறகு அவர்கள் தக்குவோ மலையிலிருந்து தப்பித்துச் சென்றனர்.
— அமின் தேசயேவ், செச்சினியக் கதாநாயகன் இடிக்கின் புராணம் மற்றும் போராட்டம் (1238-1250)
உசாத்துணை
தொகு- ↑ Anchabadze, George (2009). The Vainakhs (the Chechen and Ingush) (PDF). Tbilisi: Caucasian House. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9941-4000-37-7. இணையக் கணினி நூலக மைய எண் 587764752.
{{cite book}}
: CS1 maint: ignored ISBN errors (link) - ↑ Jaimoukha, Amjad (2005). The Chechens : a handbook. pp. 34–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32328-2. இணையக் கணினி நூலக மைய எண் 928889948.
- ↑ "Чечня. Период татаро-монгольского нашествия". ИА Чеченинфо (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.