துர்பின் மலை
துர்பின் மலை (Durpin Hill)(உள்ளூர் மொழியில் தாரா) என்பது காளிம்பொங்கில் உள்ள இரண்டு மலைகளில் ஒன்றாகும் (மற்றொன்று தியோலோ மலை). இந்த இரண்டு மலைகளும் முகடு ஒன்று மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முகட்டில் காளிம்பொங் நகரம் அமைந்துள்ளது.[1] தாரா கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,372 மீட்டர் (4,501 அடி) உயரத்தில் நகரத்தின் தென்மேற்கே அமைந்துள்ளது. காளிம்பொங் நகரம், மேற்கு சிக்கிமின் பனி மூடிய இமயமலைத் தொடர்கள், டீஸ்டா ஆறு மற்றும் பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைவில் உள்ள செலப் லா கணவாய் ஆகியவற்றைக் கண்டு களிக்கும் வகையில் இந்த மலை அமைந்துள்ளது. மலை உச்சிக்குச் சற்று தள்ளி குழிப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் உள்ளது.[2]
மலையின் மேல் தலாய் லாமாவால் 1976-ல் புனிதப்படுத்தப்பட்ட ஜாங் தோக் பால்ரி மடாலயம் உள்ளது. இந்த மடாலயம் இதன் நினைவுச்சின்னத்தில் காங்யூரின் 108 தொகுதிகளையும், சீனப் படையெடுப்பிற்குப் பிறகு திபெத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பிற புனித நூல்கள் மற்றும் சுருள்களையும் கொண்டுள்ளது.
பன்னாட்டு எல்லை அருகியில் இருப்பதால் துர்பின் மலையில் இந்தியத் தரைப்படை முக்கிய தளம் ஒன்றை அமைத்துள்ளது. மடத்தின் அருகே, இந்திய தரைப்படையின் உலங்கு வானூர்தி இறங்கு தளம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Durpin Dara" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
- ↑ "Durpin Dara hill, Kalimpong". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.