செலப் லா கணவாய்

செலப் லா (Jelep La) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் மற்றும் திபெத்திய சுயாட்சி பகுதி, சீனாவிற்கு இடையில் அமைந்துள்ள உயர்ந்த கணவாய் ஆகும். இதன் உயரம் 4,267 மீ அல்லது 13,999 அடி ஆகும். இது இந்தியா மற்றும் லாசா நகரை இணைக்கும் பாதையிம் அமைந்துள்ளது. இதன் நீளம் 46 மீ (151 அடி). செலப் லா கண்வாயிற்கு கீழே மென்மெச்சோ ஏரி அமைந்துள்ளது.

செலப் லா
செலப் லா கணவாய்
ஏற்றம்4,270 மீ (14,009 அடி)
அமைவிடம்இந்தியா (சிக்கிம்) – சீனா, (திபெத் சுயாட்சி பகுதி)
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்27°22′02″N 88°51′57″E / 27.367194°N 88.865747°E / 27.367194; 88.865747
செலப் லா is located in சிக்கிம்
செலப் லா
செலப் லா கணவாய்
சீன எழுத்துமுறை 則里拉山口
எளிய சீனம் 则里拉山口

செலப் லா என்பது திபெத்திய பெயர், இதன் அர்த்தம் அழகான சீரான கணவாய் ஆகும். இது இவ்வாறு அழைக்கப்பட காரணம் இது சிக்கிம் மற்றும் திபெத்திற்கு இடையே உள்ள எளிதான மற்றும் மிகவும் சீரான பாதையாகும்[1].

இந்திய பக்கத்திலிருந்து செலப் லா செல்ல இரண்டு பாதைகள் உள்ளன, ஒன்று கேங்டாக் வழியாக மற்றொன்று கலிம்பாங் வழியாக செல்கிறது. பழமையான பாதையான கலிம்பாங் பாதை, கடந்த நூற்றாண்டில் கம்பளி மற்றும் விலங்கின் மென்மயிர் வர்த்தகத்தால் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்தது. 1962-ல் சீனா-இந்தியா போருக்கு பிறகு இந்த கணவாய் மூடப்பட்டது. மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ள பெதாங் நகரின் வழியே இந்த கணவாய் செல்கிறது.

இக்கணவாயின் சுற்றுப்புறத்தில் பல குக்கிராமங்கள் சிதறி அமைந்துள்ளது. திபெத் பக்கத்தில் இக்கணவாய், திபெத் மேட்டுநிலத்தில் உள்ள சும்பி பல்லத்தாக்கிற்கு இட்டுச் செல்கிறது.

வரலாறு தொகு

பழங்காலத்திலிருந்து செலப் லா கணவாய், இந்தியா மற்றும் திபெத்திற்கு இடையே வாணிபம் செழித்து காணப்பட்டதால், அதிக பயன்பாட்டில் இருந்தது. பிரித்தானிய அரசு இந்தியாவை தனிமைப்படுத்த தொடங்கியதும் 1884-ல்[2] சிக்கிமை சுற்றி சாலைகளை அமைக்கத் துவங்கியது. திபெத்தியர்கள் இதை பயத்துடன் நொக்கினார்கள் மற்றும் 1886-ல் சிறிய திபத்திய ராணுவம், கணவாயின் சுற்றுப்புறப் பகுதியை கைப்பற்றியது. மே 1888-ல் பிரித்தானியர்களை தாக்கினார்கள் ஆனால் பிரித்தானிய அதிரடி படையால் துரத்தியடிக்கப்பட்டனர். பின்பு அதே வருடம் செப்டம்பரில் கணவாயின் சுற்றுப்புறப் பகுதியை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். 13– வது தலாய் லாமா[3] மங்கோலிய நாட்டிற்கு சென்று விட்டதால், திபெத்தியர்கள் மேல் பிரித்தானிய அரசு வர்த்தக ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்தியது.

1947-ல் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பிறகு, அப்போது மன்னர் ஆட்சியில் இருந்த சிக்கிம் தனித்துவாமான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொண்டது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் இந்தியாவிற்கு அளித்தது. 192-ல் நடைபெற்ற சீன-இந்திய போருக்கு பிறகு இந்த கணவாய் மூடப்பட்டது.[4][5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலப்_லா_கணவாய்&oldid=3935260" இலிருந்து மீள்விக்கப்பட்டது