துலாசா தாபா
துலாசா தாபா (Tulasa Thapa) (1970-1995) ஓர் நேபாளச் சிறுமி ஆவார். இவர் தனது 13 வயதில்[1] காட்மாண்டு அருகேயுள்ள தன் கிராமமான தங்கோட்டிலிருந்து கடத்தப்பட்டு, பர்சா மாவட்டத்தின் எல்லை நகரமான வீரகஞ்ச் வழியாக மும்பைக்கு கடத்தப்பட்டு விபச்சாரத்தில் விற்கப்பட்டார். [2] இவர் முறையாக அடித்து துன்புறுத்தப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டார். பின்னர் இவரை வர்த்தகத்திற்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் வன்கலவி செய்யப்பட்டார். இவர் மும்பையில் மூன்று வெவ்வேறு விபச்சார விடுதிகளுக்கு, 5000 முதல் 7000 ரூபாய் வரை விலைக்கு விற்கப்பட்டார். பாலியல் வேலையைத் தவிர்த்து, இரவில் குறைந்தபட்சம் மூன்று வாடிக்கையாளர்கள் (சராசரியாக எட்டுடன்) விபச்சார விடுதியில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக ஐரோப்பிய பாணியில் ஆடைகளை அணிந்து பல்வேறு நகர விடுதிகளுக்கு அனுப்பப்பட்டார். ஒரு விடுதி மேலாளர் கவல்துறையினரிடம் புகார் செய்யும் வரை ஒரு இரவுக்கு 180 ரூபாய் இவருக்கு கிடைத்தது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்தியா, நேபாள அரசாங்கங்கள் இந்தியாவில் விபச்சார விடுதிகளில் கடத்தப்பட்ட நேபாள சிறுமிகளை மீட்கவும், திருப்பி அனுப்புவது தொடர்பாகவும் 1985 ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.[3]
துலாசா தாபா | |
---|---|
பிறப்பு | 1970 தங்கோட், நேபாளம் |
இறப்பு | 1995 |
இறப்பிற்கான காரணம் | காச நோய் |
தேசியம் | நேபாளியர் |
மீட்பு
தொகுமக்கள் சுகாதார அமைப்பு ஒரு முழுமையான "துலாசாவை காப்பாற்று" என்ற பிரச்சாரத்தை தொடங்கியது. ஊடகங்களின் ஆதரவுன் இவரை காப்பாற்ற முடிந்தது. பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 1982 இல், இவர் மும்பையின் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, இவர் மூன்று வகையான பால்வினை நோய்கள், பாலுறுப்பு உண்ணிகள், மூளை காச நோய் போன்றவற்றால் அவதிப்பட்டார். இது கடைசியில் இவரது மரணத்திற்கு வழிவகுத்தது. மருத்துவமனையில், விபச்சாரத் தொழிலிலிருந்து சாத்தியமான பழிவாங்கல்களுக்கு எதிராக துலாசாவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இவரை இவரது தந்தை பிர் தோஜ் தாபாவிடம் திருப்பித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவர் தனது தந்தையின் இரண்டாவது மனைவியால் நிராகரிக்கப்பட்டார் (துலாசாவின் தாயார் இவர் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார்), இறுதியில் இவரது குடும்பத்தினர் இவரை சந்திப்பதை நிறுத்தினர். 1994 இல் துலாசா தனது தற்கொலை முயற்சியில் தனது காலை முறித்துக் கொண்டார்.
இரு அரசுகளிடையேயான ஒப்பந்தம்
தொகுஇவர், 1995இல் தனது விடுதியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்தியாவில் பாலியல் தொழிலாளியாக அடிமைப்படுத்தப்பட்டபோது, இவர் பெற்ற காசநோயின் காரணமாக தனது 24வது வயதில், இறந்தார். இதன் விளைவாக வெளிவந்த ஊடக எதிர்ப்பு காரணமாக இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய விபச்சார விடுதிகளிலிருந்து நேபாள சிறுமிகளை மீட்டு நாடு திரும்புவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தியாவில் சிறார்களை கடத்தியதற்கான தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தை விபச்சாரம் சுமார் 40% குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும், துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ராய்ட்டர்ஸ் கூறுப்படி , மும்பையில் 1996இல் முக்கிய விபச்சார விடுதிகளில் காப்பாற்றப்பட்ட 484 விபச்சார பெண்களில் 40% க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.
தண்டனை
தொகு2000ஆம் ஆண்டில், இவரை துன்புறுத்தியவர்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதால், இவர் சிறிது காலம் மீண்டும் செய்தி வெளிச்சத்தில் வந்தார். திசம்பர் 6, 1982 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் அறிக்கையில், துலாசா கடத்தி வெவ்வேறு விபச்சார விடுதிகளுக்கு விற்றதாக 32 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் வாகன் ஓட்டி, கடத்தல்காரர்கள், விபச்சார விடுதி உரிமையாளர்கள் அடங்குவர். காஞ்சா சார்கி, லால் பகதூர் கனி, உத்தம்குமார் பரியார் ஆகிய மூன்று நேபாள ஆண்களும் இதில் அடங்குவர். அவர்களை நேபாள அரசு கைது செய்து இறுதியாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்ட 32 பேரில், ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே விசாரணையை எதிர்கொண்டார். மீதமுள்ளவர்கள் தங்களை தப்பித்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Chander Uday (July 26, 2013). "13-year-old girl from Nepal suffers the horrors of Bombay's flesh markets". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
- ↑ "Tulasa and the horrors of child prostitution sold and resold body and soul".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Trafficking of Nepali Girls and Women to India's Brothels". Archived from the original on 2009-02-05. பார்க்கப்பட்ட நாள் 2009-01-05.
வெளி இணைப்புகள்
தொகு- Saving Tulasa, Child Sex Worker from India பரணிடப்பட்டது 2016-10-03 at the வந்தவழி இயந்திரம்
- Victims of the Dar from The Hindu Online, September 29, 1996
- The shade of Tulasa seeks justice by Kanchana Suggu[தொடர்பிழந்த இணைப்பு]
- Robert I. Freidman, "India’s Shame: Sexual Slavery and Political Corruption Are Leading to An AIDS Catastrophe," The Nation, 8 April 1996.