பர்சா மாவட்டம்

நேபாளத்தின் மாதேஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம்

பர்சா மாவட்டம் (Parsa District) (நேபாளி: पर्सा जिल्लाகேட்க, தெற்காசியாவில் நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வீரகஞ்ச் நகரம் ஆகும்.

நேபாளத்தில் பர்சா மாவட்டத்தின் அமைவிடம்
இந்திய-நேபாள எல்லையில் பீர்கஞ்ச் நகரத்தில் அமைந்த நுழைவாயில்

நாராயணி மண்டலத்தின் தராய் சமவெளியில் அமைந்த பர்சா மாவட்டத்தின் பரப்பளவு 1,353 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 6,01,017 ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (44%), நேபாள மொழி (45%), உருது மொழி (1%) மற்றும் பிற மொழிகள் (1%) பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,300 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [1]

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

தொகு
 
பர்சா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

பர்சா மாவட்டத்தில் எண்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும், பீர்கஞ்ச் எனும் நகராட்சியும் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சா_மாவட்டம்&oldid=3099662" இலிருந்து மீள்விக்கப்பட்டது