துல்கர் சல்மான்

இந்திய திரைப்பட நடிகர்

துல்கர் சல்மான் (Dulquer Salmaan மலையாளம்: ദുൽഖർ സൽമാൻ) ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

துல்கர் சல்மான்
அறுபதாவது பில்ம்பெயார் விருதுகளின் போது துல்கர்_சல்மான், 2013
பிறப்புகொச்சி, கேரளா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பர்து பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–அறிமுகம்
பெற்றோர்மம்மூட்டி
சுல்பாத்
வாழ்க்கைத்
துணை
அமல் சுபியா (m.2011–அறிமுகம்)
உறவினர்கள்மக்பூல் சல்மான் (உறவினர்)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர் சூலை 28, 1986 இல் தென்னிந்தியா, கேரளா, இந்தியாவில் பிறந்தார்.[1] இவர் மலையாளம், தமிழ் திரைப்பட நடிகர் மம்மூட்டி - சுல்பாத் தம்பதியரின் மகன் ஆவார். இவருக்கு குட்டி சுருமி என்ற இளைய சகோதரி உள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

  1. Sushmita Sen (28 July 2015). "Happy Birthday Dulquer Salmaan: 'OK Kanmani' Actor Thanks Fans For Wishes". International Business Times. Archived from the original on 5 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துல்கர்_சல்மான்&oldid=3612635" இலிருந்து மீள்விக்கப்பட்டது