துள்ளுகுரங்கு
துள்ளுகுரங்கு தித்தி, Titis[1] | |
---|---|
தாமிர துள்ளுகுரங்கு Coppery Titi (C. cupreus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Callicebinae Pocock, 1925
|
பேரினம்: | காலிசிபசு Callicebus Thomas, 1903
|
மாதிரி இனம் | |
Simia personatus É. Geoffroy, 1812 | |
இனங்கள் | |
29 இனங்கள், கட்டுரையைப் பார்க்கவும் |
துள்ளுகுரங்குகள் அல்லது தித்திகள் என்பன தென்னமெரிக்க சிறுகுரங்குகள். தென்னமெரிக்கக் குரங்குகள் அணில்கள் போலும் சிறியனவாக இருப்பதால் அரிங்குகள் என்றும் அழைக்கப்படும். இத்துள்ளுகுரங்குகள் தென் அமெரிக்காவில் கொலம்பியா முதல் பிரேசில் வரையிலும், வடக்கே பெரு முதல் தெற்கே பராகுவே வரையிலும் காணப்ப்படுகின்றன. இவை அமேசான் காட்டில் பெரும்பாலும் காணப்படுகின்றன. இவ்வகை அரிங்குகள் அல்லது குரங்குகளின் உயிரினப் பெயர் காலிசெபசு (Callicebus) என்பதாகும். காலிசெபெனே (Callicebinae) என்னும் துணைக்குடும்பத்தில் இவை ஒன்றே இன்று உயிர்வாழும் உயிரினம். இத்துள்ளுகுரங்கு அல்லது தித்தி வகையில் இனத்துக்கு இனம் உடல் அளவு சிறிது மாறுபடும். தலையும் உடலும் சேர்ந்து 23-46 செ.மீ (9-18 அங்.) அளவே இருக்கும். இதன் வால்கள் தலை-உடலைவிட நீளமானதாகும். ஏறத்தாழ 26-56 செ.மீ (10-22 அங்.) இருக்கும்.[2] இதன் உடல் மயிர் சற்று நீளமானதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலோ, சாம்பல், கருஞ்சாம்பல் நிறத்திலோ இருக்கும். இதன் வாலில் நிறைய முடி இருக்கும், ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த பிற குரங்குகளை (அரிங்குகளைப்) போல பற்றுவால் கொண்டவை அல்ல (வாலில், அடிப்பகுதி வலுவாக பற்றிக்கொள்ளும் தன்மை உடையவற்றைப் பற்றுவால் (prehensile) என்பர்). இவை கிளைக்குக் கிளை துள்ளித் தாவுவதால் துள்ளுகுரங்கு என்று அழைக்கப்படுகின்றன. இடாய்ச்சு மொழியில் இதனை Springaffen (குதிக்கும் குரங்குகள்) என்றே அழைக்கின்றனர்.
துள்ளுகுரங்குகள் அடர்ந்த காடுகளில் நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் பெரும்பாலும் வாழ்வன. பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம் என்பதால் இவற்றைப் பகலாடிகள் என்பார்கள். இவற்றின் உணவு பெரும்பாலும் பழங்கள் என்பதால் இவற்றைப் பழந்தின்னிகள் எனலாம், ஆனால் இவை இலைகள், பூக்கள், சிறுபூச்சிகளையும் உண்னும். பறவைகளின் முட்டைகள்ளையும், சிறு முதுகெலும்பு உயிரிகளையும் உண்ணும்.[2]
துள்ளுகுரங்குகள் அல்லது தித்திகள் ஒரே ஆணும் பெண்ணுமாக வாழ்நாள் முழுவதும் உறவுகொள்கின்றன. சிறு குடும்பமாக, ஏறத்தாழ 7 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. இவை ஒன்றை ஒன்று வருடிக்கொண்டும், இணைகள் ஒன்றோடு ஒன்று வாலை முறுக்கிக்கொண்டு உறங்கிக்கொண்டும் இருப்பதைப் பார்க்கலாம். இவை தங்கள் வாழிடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போராடுகின்றன.
இவ்வினத்தின் இனப்பெருக்கத்தில், பெண் அரிங்குகள் சினையாக இருக்கும் காலம் ஐந்து மாதாம் ஆகும். பெரும்பாலும் ஒற்றைக் குட்டியையே ஈனுகின்றன, ஆனால் மிகச்சிறுபான்மையான அளவில் (1.4%) இரட்டைகளும் பிறக்கின்றன (காலிசெபசு மொலொக் (C. moloch) என்னும் இனத்தில் காட்டப்பட்டது.)[3] இரண்டாவது குட்டி பெரும்பாலும் உயிர்பிழைப்பது இல்லை என்றாலும், அந்த இரண்டாம் குட்டியை அருகில் உள்ள மற்றொரு குடும்பம், வளர்க்க எடுத்துக்கொள்வது காணப்படுகின்றது என்று கண்டுள்ளார்கள்.[4] இந்த அரிங்கு இனத்தில் ஆண் அரிங்கே பெரும்பாலும் குட்டி வளர்ப்பில் பங்குகொள்கின்றது. குட்டிகள் தாய்ப்பால் குடிப்பதை ஐந்து மாதத்திற்குப் பிறகு விட்டு விடுகின்றன. அதன் பின் அவை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆனபின் முழுவளர்ச்சி அடைந்த அரிங்காக மாறிவிடுகின்றன. மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆன பிறகு தன் துணையயைத் தேர்ந்தெடுப்பதற்காக குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்கின்றன. இவற்றின் வாழநாள் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாவிட்டாலும், டார்க்குவாட்டசு (Torquatus) என்னும் உள்ளினம் 12 ஆண்டுகள் வரை இயற்கையில் வாழ்வதாகக் கணித்துள்ளனர்.[5] ஆனால் காலிசெபசு மோலொக் (C. moloch) என்னும் வகை உயிர்க்காட்சியகங்களில் 25 ஆண்டுகள் வரை வாழ்வதாகக் கண்டுள்ளனர்.[2]
உயிரின வகைப்பாடு
தொகு- Subfamily Callicebinae
- Genus Callicebus
- Subgenus Callicebus
- C. donacophilus group
- White-eared Titi, Callicebus (Callicebus) donacophilus
- Rio Beni Titi, Callicebus (Callicebus) modestus
- Rio Mayo Titi, Callicebus (Callicebus) oenanthe
- Ollala Brothers' Titi, Callicebus (Callicebus) olallae
- White-coated Titi, Callicebus (Callicebus) pallescens
- C. moloch group
- Baptista Lake Titi, Callicebus (Callicebus) baptista
- Prince Bernhard's Titi, Callicebus (Callicebus) bernhardi
- Brown Titi, Callicebus (Callicebus) brunneus
- Ashy Black Titi, Callicebus (Callicebus) cinerascens
- Hoffmanns's Titi, Callicebus (Callicebus) hoffmannsi
- Red-bellied Titi, Callicebus (Callicebus) moloch
- C. personatus group
- Barbara Brown's Titi, Callicebus (Callicebus) barbarabrownae
- Coimbra Filho's Titi, Callicebus (Callicebus) coimbrai
- Coastal Black-handed Titi, Callicebus (Callicebus) melanochir
- Black-fronted Titi, Callicebus (Callicebus) nigrifrons
- Atlantic Titi, Callicebus (Callicebus) personatus
- C. cupreus group
- Chestnut-bellied Titi, Callicebus (Callicebus) caligatus
- Caquetá Titi, Callicebus (Callicebus) caquetensis
- Coppery Titi, Callicebus (Callicebus) cupreus
- GoldenPalace.com Monkey, Callicebus (Callicebus) aureipalatii
- White-tailed Titi, Callicebus (Callicebus) discolor
- Hershkovitz's Titi, Callicebus (Callicebus) dubius
- Ornate Titi, Callicebus (Callicebus) ornatus
- Stephen Nash's Titi, Callicebus (Callicebus) stephennashi
- C. donacophilus group
- Subgenus Torquatus
- Lucifer Titi, Callicebus (Torquatus) lucifer
- Black Titi, Callicebus (Torquatus) lugens
- Colombian Black-handed Titi, Callicebus (Torquatus) medemi
- Rio Purus Titi, Callicebus (Torquatus) purinus
- Red-headed Titi, Callicebus (Torquatus) regulus
- Collared Titi, Callicebus (Torquatus) torquatus
- Subgenus Callicebus
- Genus Callicebus
அடிக்குறிப்புகளும் சான்றுகோள்களும்
தொகு- ↑ Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 141–146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help); Check date values in:|date=
(help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ 2.0 2.1 2.2 Nowak, R. M. (1999). Walker's Mammals of the World. 6th edition. The Johns Hopkins University Press, Baltimore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801857899
- ↑ Valeggia, Mendoza, Fernandez-Duque, Mason, and Lasley (1999). "Reproductive Biology of Female Titi Monkeys (Callicebus moloch) in captivity". American Journal of Primatology 47 (3): 183–195. doi:10.1002/(SICI)1098-2345(1999)47:3<183::AID-AJP1>3.0.CO;2-J. பப்மெட்:10075433. http://www.sas.upenn.edu/~eduardof/Publications/Valeggiaetal,%20Reprod%20Biol%20Callicebus,%20AJP%201999.pdf.
- ↑ Cäsar, and Young; Young, RJ (2008). "A case of adoption in a wild group of black-fronted titi monkeys (Callicebus nigrifrons)". Primates 49 (2): 146–148. doi:10.1007/s10329-007-0066-x. பப்மெட்:17938856.
- ↑ Rowe, Noel (1996). The Pictorial Guide to Living Primates. Pogonias Press, Charlestown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9648825-1-8 பிழையான ISBN