துவாந்தர் அருவி
துவாந்தர் அருவி (Dhuandhar Falls) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அருவி ஆகும்.[1]
சொற்பிறப்பியல்
தொகு'துவாந்தர்' என்ற சொல் இரண்டு இந்தி சொற்களிலிருந்து பெறப்பட்டது. இச்சொற்கள் துவான் (புகை) மற்றும் தார் (ஓட்டம்). அதாவது புகை போன்ற ஓட்டத்தினை உடைய நீரைக் கொண்டது.
அருவி
தொகுதுவாந்தர் அருவி நருமதை ஆற்றில் பேடாகாட்டில் அமைந்துள்ளது. இது 30 மீட்டர் உயரம் உடையது. நருமதை ஆறு, உலகப் புகழ்பெற்ற பளிங்குக்கல் பாறைகள் வழியாகச் சென்று, குறுகி, பின்னர் துவாந்தர் என்று அழைக்கப்படும் அருவியாக விழுகிறது. அருவியின் ஓசையினைத் தொலைதூரத்திலிருந்து கேட்கக்கூடிய அளவுக்குச் சக்திவாய்ந்ததாக இந்த அருவி விழுகின்றது.
துவாந்தர் நீர்வீழ்ச்சியில் படகுச் சவாரி வசதியும் உள்ளது.[2]
துவாந்தர் அருவி கம்பி வட வசதி
தொகுகிழக்குக் கரை மற்றும் நருமதை ஆற்றின் மேற்குக் கரையிலிருந்து துவாந்தர் அருவியை அணுகலாம். துவாந்தர் அருவியின் மறுபுறத்தைப் பார்க்க, பெடாகாட்டில் கிடைக்கும் கம்பி வட பயணச் சேவையைப் பெற வேண்டும். கயிற்றுப்பாதை வசதியானது நருமதை ஆற்றின் கிழக்குக் கரையில் தொடங்கி, ஆற்றைக் கடந்து, ஆற்றின் மேற்குக் கரை வரை செல்கின்றது.
-
துவாந்தர் அருவியில் கம்பி வட சேவை
படங்கள்
தொகு-
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பேடாகாட்டில் அமைந்துள்ள துவாந்தர் அருவி
-
பிப்ரவரி 2011
-
துவாந்தர் அருவி பருவமழைகாலத்தில்
-
தூரத்திலிருந்து தூவாந்தர் அருவி .
-
துவாந்தர் அருவியின் தொடர்ச்சியாக நருமதை ஆறு
-
துவாந்தர் அருவி, நவம்பர் 2021
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jabalpur– a center of Kalchuri and Gond dynasties". Tourism - Falls & Views. Jabalpur district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
- ↑ "10 Breathtaking Waterfalls in Indian Subcontinent". Deepak Singh (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 25 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.