மிதிவண்டி

(துவிச்சக்கர வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

'மிதிவண்டிஈருருளி' (தமிழகப் பேச்சு வழக்கு:சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை [1]. போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன.

ஒரு பந்தய மிதிவண்டி
சிறுவர் சிறுமியர் ஓட்டி விளையாடும் மிதிவண்டி

வரலாறு

தொகு

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட மிதிவண்டி ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார்.[2] இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது

== திசைமாற்றியுடன் கூடிய மிதிவண்டி ==kuh\n கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டியில் தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.[3]

லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி மிதிவண்டி தயாரிக்க முயற்சித்தார்.[4] கார்ல் வோன் ட்ரைஸின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றது.[5][6][7]

நவீன வடிவம்

தொகு

உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதிவண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி , தடை மற்றும் மிதிஇயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

இதில் பின்புறச்சக்கரம் முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி, தடை மற்றும் மிதிஇயக்கி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. தையல் இயந்திரத்தில் உள்ள மிதி இயக்கியை போன்று கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு மிதிவண்டி இயங்கியது. அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார்.

முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த இயக்கியைச் மிதித்துச் சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு மிதிவண்டி இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.இதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பைக் கண்டு 1868-ஆம் ஆண்டு மிசாக்ஸ் கம்பெனி என்ற பெயரில் மிதிவண்டி நிறுவனம் ஒன்றை துவக்கினார். இது உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் ஆகும்.

பிற பாகங்கள்

தொகு

ரிம் மற்றும் ஸ்போக்ஸ் கம்பிகள்

தொகு

மிதிவண்டியின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து மிதிவண்டியின் சக்கரத்தையும் உலோகத்தில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவர்களது முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்கு தேவையான சில முக்கிய பாகங்களான சக்கரத்தின் ரிம் மற்றும் ஸ்போக்ஸ் கம்பிகள் தயாரிப்பதில் வெற்றிகண்டனர். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.

புதிய தொழில்நுட்பம்

தொகு

இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய மிதிவண்டி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறsசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறsசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த மிதிவன்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இதனை முதன் முதலாக பெண்களும் பயன்படுத்தத்தொடங்கினார்கள்.[8][9] தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட மிதிவன்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.[10]

பற்சக்கரம் மற்றும் இயக்கி சங்கிலி

தொகு

மிதிவண்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.[11] இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இரப்பர் சக்கரம் மற்றும் காற்றுக்குழாய்

தொகு

1888-ஆம் அண்டு சான் பாய்டு தன்லப்பு (John Boyd Dunlop) என்ற இசுகாட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான மெத்துப்பட்டையாகிய இரப்பருடன் மேற்புறமும் (டயர்) மற்றும் தூம்பு (குழாய்) ஆகியவற்றைச் செய்யும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், [12]

சான் கெம்பு இசுட்டார்லி

தொகு

கிர்க்பாட்ரிக்கு மேக்மில்லன் வடிவமைத்த மிதிவண்டியைத் தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த மிதிவண்டிகள் அனைத்தும் முன்புறச்சக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் மிதிவன்டி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி மிதிவண்டியை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து 'இன்றைய நவீன சைக்கிளின் தந்தை' என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் என்றி இலாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய மிதிவண்டி ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.

இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது மிதிவண்டியில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த மிதியியக்கி, இயக்குசங்கிலி மூலம் பின்புறச்சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகை மிதிவன்டிதான் இன்று நாம் பயன்படுத்தும் மிதிவண்டியாகும்

எர்க்குலீசு நிறுவனம்

தொகு

இதனை தொடர்ந்து சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane)[13] என்பவர் சான் கெம்பு இசுட்டேர்லியுடனும் சான் பாய்டு தன்லப்புடனும் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆசுடன் (Aston) நகரில் எர்க்குலீசு 9Hercules) என்ற மிதிவண்டி நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் மிதிவண்டி தனது காலடிச் சுவடுகளை பதியச்செய்யத் தொடங்கிவிட்டது.[14]

உசாத்துணை

தொகு
  • All About Bicycling, Rand McNally.
  • Richard Ballantine, Richard's Bicycle Book, Pan, 1975.
  • Caunter C. F. The History and Development of Cycles Science Museum London 1972.
  • David B. Perry, Bike Cult: the Ultimate Guide to Human-powered Vehicles, Four Walls Eight Windows, 1995.
  • Roni Sarig, The Everything Bicycle Book, Adams Media Corporation, 1997
  • "Randonneurs USA". PBP: Paris-Brest-Paris. March 31, 2005.
  • US Department of Transportation, Federal Highway Administration. "America's Highways 1776-1976", pp. 42–43. Washington, DC, US Government Printing Office.
  • David Gordon Wilson, Bicycling Science, MIT press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-73154-1
  • David V. Herlihy, Bicycle: The History, Yale University Press, 2004
  • Frank Berto, The Dancing Chain: History and Development of the Derailleur Bicycle, San Francisco: Van der Plas Publications, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-892495-41-4.
  • The Data Book: 100 Years of Bicycle Component and Accessory Design, San Francisco: Van der Plas Publications, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-892495-01-5.
  • Shonquis Moreno and Ole Wagner, Velo: bicycle culture and design. Edited by Robert Klanten and Sven Ehmann. Berlin: Gestalten, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89955-284-3

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. Herlihy, David V. (2004). Bicycle : the history. Yale University Press. pp. 200–250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10418-9.
  2. Baudry de Saunier, Louis (1891). Histoire Générale de la Vélocipédie. Ollendorff Paris. pp. 4–8.
  3. "Canada Science and Technology Museum: from Draisienne to Dandyhorse". Retrieved 2008-12-31.
  4. Herlihy, David (2004). Bicycle: the History. Yale University Press. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10418-9. Retrieved 2009-09-29.
  5. "Lessing, Hans-Erhard: "What Led to the Invention of the Early Bicycle?" Cycle History 11, San Francisco 2001, pp. 28-36".
  6. "LODA, eine neuerfundene Fahrmaschine" in: Badwochenblatt für die Großherzogliche Stadt Baden of 29th of July 1817
  7. Eesfehani, Amir Moghaddaas: "The Bicycle's Long Way to China", Cycle History 13, San Francisco 2003, pp. 94-102
  8. Goddard, J. T. (1869). The velocipede: its history, varieties, and practice. New York: Hurd and Houghton. p. 85. OCLC 12320845. OCOLC 659342545.
  9. "VELOCIPEDES.; Their Introduction, Use and Manufacture--Riding Schools--Rival Claims of the Patent.". New York Times. 1869-03-08. "Pickering & Davis have recently brought out a ladies' bicycle which has a comfortable willow seat"
  10. Herlihy, David (2004). Bicycle: the History. Yale University Press. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10418-9. Retrieved 2009-09-29.
  11. Early chain-driven bikes used a heavy one-inch (25.4 mm) block chain, compared to the modern half-inch (12.7 mm) roller type. Northcliffe, p.53.
  12. Sheldon Brown. "One-Speed Bicycle Coaster Brakes". Retrieved 2010-12-01. "Coaster brakes were invented in the 1890s."
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-16. பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
  14. Herlihy, David V. (2006). Bicycle: The History. New Haven, CT: Yale University Press. p. 280. ISBN 289380300104189.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிவண்டி&oldid=3911350" இலிருந்து மீள்விக்கப்பட்டது