து. செல்வராஜ்
து. செல்வராஜ் என்ற ஊர்வசி செல்வராஜ் (இறப்பு: ஜூலை 5, 2009) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி மற்றும் தொழிலதிபராவார்.[2]
ஊர்வசி செல்வராஜ் | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 15 மே 2006 – 05 சூலை 2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நளினி[1] |
பிள்ளைகள் | ஊர்வசி அமிர்தராஜ் |
பெற்றோர் | துரைசாமி நாடார், ராஜம்மாள்[1] |
அரசியல்
தொகுஇவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராக 1990 முதல் 1997 வரை இருந்துள்ளார். பின்னர் ஜி. கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டம் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொந்த வாழ்க்கை
தொகுசெல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாறாந்தலை கிராமத்தில் பிறந்தார். ஊர்வசி என்பது சலவைக் கட்டி நிறுவனம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவான குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தின் நிறுவனராவார்.[1] இவர் மாரடைப்பு காரணமாக ஜூலை 5, 2009 ஆம் நாள் காலமானார். இவருக்கு அப்பொழுது வயது 58. இவருக்கு அமிர்தராஜ் மற்றும் ஆனந்தராஜ் என்ற இரண்டு மகன்களும் ராஜ பிரியா என்ற மகளும் உள்ளனர். இவரது மகனான ஊர்வசி அமிர்தராஜ் கிங்ஸ் பொறியியல் கல்லூரியை நிர்வாகம் செய்துவருகிறார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "காங் எம்.எல்.ஏ செல்வராஜ் மரணம்-சட்டசபை ஒத்திவைப்பு". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/2009/07/06/tn-congress-mla-selvaraj-dies.html. பார்த்த நாள்: 13 March 2021.
- ↑ 2.0 2.1 "ஊர்வசி செல்வராஜ் நினைவு: இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=492534. பார்த்த நாள்: 13 March 2021.