தூத்துக்குடி மக்ரூன்

தூத்துக்குடி மக்ரூன் (Thooththukkudi macaroon) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான தூத்துக்குடியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு வகை மக்ரூன் ஆகும். மக்ரூன்கள் பாரம்பரியமாக வாதுமையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.[1] ஆனால் தூத்துக்குடி மக்ரூன்கள் முந்திரியினை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டுள்ளன. 

தூத்துக்குடி மக்ரூன்

வரலாறு தொகு

தூத்துக்குடி மக்கரூன் அடிப்படையில் தூத்துக்குடியில் இந்தியமாக்கப்பட்ட ஐரோப்பிய மாக்கரூன் ஆகும். இதனை அருணாசலம் பிள்ளை என்பவர் இம்மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடிக்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகள் உள்ளூர் தொழிலாளர்களை மக்ரூன்கள் தயாரிக்கப் பயன்படுத்தியதாகவும், அதனை இவர்கள் தற்போதைய வடிவத்திற்கு மேம்படுத்தினர் என்று வரலாறு கூறுகின்றது.[2] இதேபோன்ற தயாரிப்பு மங்களூருவின் அடுமனைகளிலும் பரவலாகப் பிரபலமாக உள்ளது. இந்த மக்ரூன்கள் கோவாவின் போர்த்துகீசிய காலனித்துவத்தினாலும், கோவா கத்தோலிக்கர்கள் தென்கனராவிற்கு குடிபெயர்ந்ததாலும் இப்பகுதிகளில் அறிமுகமானது.

தேவையான பொருட்கள் தொகு

  • முட்டை வெள்ளை கரு
  • சர்க்கரை
  • முந்திரி பருப்பு[2]

மேற்கோள்கள் தொகு