தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி
தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி (St. Thomas College, Chennai) சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி தமிழ்நாட்டில், சென்னையில் கோயம்பேட்டில் உள்ளது.[1]
தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
கோயம்பேடு, சென்னை. இந்தியா | |
தகவல் | |
வகை | தனியார், சுயநிதிக் கல்லூரி |
குறிக்கோள் | ஒளி நிறைந்திருக்கட்டும்! |
தொடக்கம் | 1999 |
நிறுவனர் | முனைவர் யகோப் மார் இரனாயோசு, சென்னை மாநகரம் (1997-2009) |
Chairman | முனைவர் யுகனோன் மார் டையாசுகோரோசு (2009- ) |
அதிபர் | முனைவர் தங்கவேலு |
பால் | இருபாலர் |
இணைப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையம் | http://www.saintthomascollege.com/ |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி மரபார்ந்த சிரியன் கதீட்ரல் பாரிசு அறக்கட்டளையால் 1999ஆம் ஆண்டு இருபாலர் பயிலும் கல்லூரியாகத் தொடக்கப்பட்டது.[2]
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலையில் வணிகவியல், வணிக மேலாண்மை, கணிப்பொறி அறிவியல், கணிதவியல், காட்சித்தொடர்பியல், மின்னணு ஊடகவியல், ஆங்கில இலக்கியம் ஆகியப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதுகலையில் காட்சித்தொடர்பியல், மின்னணு ஊடகவியல் ஆகியப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ https://collegedunia.com/college/4961-st-thomas-college-of-arts-and-science-chennai