தூய பீட்டர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

தமிழ்நாட்டின், ஒசூரில் உள்ள மருத்துவக் கல்லூரி

தூய பீட்டர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (St. Peter's Medical College Hospital and Research Institute) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் ஒசூர் மாவட்டத்தில், பத்தலப்பள்ளியில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 7 இல் 121 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில், அதியமான் பொறியியற் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள ஒரு சுயநிதி மருத்துவக் கல்லூரி ஆகும். இது செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கியது. இந்த நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், உடன் இணைந்துள்ளது.[1] இந்த மருத்துவக் கல்லூரியானது 2022 பெப்ரவரி 21 அன்று திறக்கப்பட்டது.[2]

தூய பீட்டர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
நிறுவப்பட்டது2022
வகைமருத்துவக் கல்லூரி
துறை முதல்வர்மரு சோமசேகர்
அமைவுபத்தலபள்ளி, ஒசூர், தமிழ்நாடு
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்https://spmch.ac.in/

ஆதாரங்கள் தொகு

  1. "சபாஷ் தமிழ்நாடு… எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 10,375 இடங்கள்; இந்தியாவிலேயே அதிகம்!". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  2. ஒசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு விழா ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பங்கேற்பு, செய்தி தினமணி 22. பெப்ரவரி 2022