தூளி முடிச்சு

ஒரு வகை முடிச்சு

தூளி முடிச்சு அல்லது துணி முடிச்சு (Sheet bend) என்பது ஒரு வகை முடிச்சாகும். ஒரே பருமனில் உள்ள அல்லது வேறுபட்ட பருமனில் காணப்படும் கயிறுகளை இணைக்க இக்கட்டு உதவுகின்றது. இக்கட்டு வளையக்கட்டுடன் ஒத்ததாகும். இக்கட்டினை விரைவாகவும் இறுக்கமாகவும் கட்டலாம். இக்கட்டு நெசவாளியின் கட்டு எனவும் அழைக்கப்படுகின்றது. முற்காலத்தில் நெசவாளிகள் தமது நெசவுப்பேட்டையில் அதிகமாக இக்கட்டைப் பயன்படுத்தியதால் இவ்வாறு இக்கட்டு அழைக்கப்படுகின்றது. பாய் மரக் கயிறுகளைக் கட்டுவதற்காகவும் இக்கட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பெக்கட் கட்டு எனவும் இக்கட்டு அழைக்கப்படுகின்றது. எளிமையான இந்த முடிச்சானது ஆஸ்லி புக் ஆஃப் நாட்ஸ் இல் முதன்மை முடிச்சுகளில் ஒன்றாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

துணிக்கட்டு
Sheet bend
பெயர்கள்துணிக்கட்டு
Sheet bend, பெக்கட் கட்டு, நெசவாளியின் கட்டு, நெசவாளியின் குழைச்சு
வகைவளைவு
செயற்றிறன்48%–58%
தொடர்புவளையக்கட்டு
பொதுப் பயன்பாடுகயிறுகளை இணைத்தல்
ABoK(simple) #1, #66, #1431; (double) #488, #1434; (weaver's) #2, #485;
முடிச்சுப் போடுவதற்கான படிகள்

இவற்றையும் பார்க்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sheet bends
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Ashley, Clifford W. (1944). The Ashley Book of Knots (PDF). Doubleday. pp. 9, 18. Archived from the original (PDF) on 19 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூளி_முடிச்சு&oldid=3953938" இலிருந்து மீள்விக்கப்பட்டது